உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

BP Control foods
BP Control foodshttps://www.aarp.org

லகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2024ம் ஆண்டின் உலக உயர் இரத்த அழுத்த தினத்தின் கருப்பொருள், 'உங்கள் இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடவும், கட்டுப்படுத்தவும், நீண்ட காலம் வாழவும்' என்பதாகும். இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. சிட்ரஸ் பழங்கள்: திராட்சை, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் தாவர சேர்மங்கள் உள்ளன. இவை உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகளை குறைக்கும்.

2. விதைகள்: சியா விதைகள் ஆளி விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றிலும் பிஸ்தா, பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகளிலும் நார்ச்சத்து மற்றும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான காரணியாக செயல்படும்.

3. பருப்பு வகைகள்: பட்டாணி, பீன்ஸ், பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, கொள்ளு போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்.

4. பெர்ரி பழங்கள்: அவுரி நெல்லிகள், ராஸ்பெர்ரிகள், திராட்சை. குருதி நெல்லிகள் போன்றவை அற்புத ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

5. முழு தானியங்கள்: பழுப்பு அரிசி, சோளம், முழு ஓட்ஸ் போன்ற முழு தானியங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

6. ஆலிவ் எண்ணெய்: இது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை தடுக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஒமேகா 9 கொழுப்பு அமிலம் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன.

7. கேரட்: இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் சிறந்த காய்களில் ஒன்று கேரட். தினமும் ஒரு கப் துருவிய கேரட் சாப்பிடுவது நல்லது.

8. முட்டை: ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் இரத்த அழுத்த மேலாண்மையை சீர்படுத்தும் உணவு இது. வாரத்திற்கு ஐந்து முட்டைகள் இரத்த அழுத்த நோயாளிகள் சாப்பிடலாம்.

9. தக்காளி: தக்காளியில் பொட்டாசியம் மற்றும் லைகோபின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிக்கும் லைக்கோபின். தினமும் ஒரு தக்காளியாவது சாப்பிட வேண்டும்.

10. புரோக்கோலி: இதில் உள்ள ஃபிளாவனாய்டு, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன.

11. தயிர்: இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் ஒரு அற்புத உணவு தயிர்.

12. மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள்: செலரி விதை, கொத்தமல்லி, குங்குமப்பூ, மிளகு, பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள், சீரகம், சிவப்பு மிளகாய், லவங்கப்பட்டை, ஏலக்காய், துளசி, இஞ்சி போன்ற மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் உணவிற்கு சுவையூட்டுவதுடன் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.

இதையும் படியுங்கள்:
தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?
BP Control foods

13. உருளைக்கிழங்கு: தோலுடன் சேர்த்து வேக வைக்கப்பட்ட ஒரு சிறிய உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. ஒரு நடுத்தர அளவில் உள்ள வாழைப்பழத்தில் உள்ளதை விட அதிகமான பொட்டாசியம் இதில் உள்ளது.

14. கிவி பழம்: வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்களை உள்ளடக்கிய கிவி பழம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இது நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிரம்பியது

15. சால்மன் மீன்: ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகையான சால்மன் இரத்த அழுத்த அளவை குறைக்க உதவுகிறது. இதய நோய் அபாயத்தையும் இது குறைக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com