
இறைவன் படைப்புளில் பலவித கோணங்களில் மனிதன் தன் வாழ் நாளைக்கடத்துகிறான். பலவித முகங்களோடு அதாவது மாறுபட்ட முகத்தோடு வேறு வழி இல்லாமல் சில சுயநல வாதிகளிடமும் பேசித்தான் ஆகவேண்டியுள்ளது. ஒவ்வொருக்கும் இரண்டு மூன்று முகங்கள் உள்ளன.
வெள்ளந்தியாய் பழகும் சிலருக்கு அது உடனே புாியாது. காலப்போக்கில் புாியும்போது மனதின் வலி சம்பந்தப்பட்டவருக்குத்தான் தொியும். ஏன் இந்த நிலைபாடுகளில் மனிதன் பல்வேறு குணங்களை தன்னகத்தே கொண்டு வாழ்கிறான் என்பது விடை தொியா கேள்வியாகவே தொிகிறது. எந்த நிலையில் நம்மிடம் எந்த மனதோடு எதிா்தரப்பினா்கள் பேசுகிறா்கள், பழகுகிறாா்கள் என்பது புாியாத புதிராகவே உள்ளது.
உறவிலும் சரி, நட்பிலும் சரி இது போன்ற நிலை வியாபித்துக்கிடப்பது நல்ல ஆரோக்கியமாக தொியவில்லை.
முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னோக்கிப் பாா்த்தால் இது போன்ற நிலைபாடுகள் கொஞ்சம் குறைவுதான். கால சக்கரம் சுருளச் சுருளத்தான், நாட்கள் நகர நகரத்தான், சுருங்கிய மனது படைத்த மனிதர்களின் மனப்பக்குவம்அப்படி அமைந்து விட்டதோ என ஐயப்படாமல் இருக்கமுடியவில்லை.
நம்மைப்பாா்த்தால் ஒரு பேச்சு, நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் ஒரு பேச்சு, இந்த நிலை நிறைய மனிதர்களிடம் அறியமுடிகிறது. அவசர யுகம்தான் தொிகிறது! பரபரப்பான வாழ்க்கைதான்புாிகிறது! அதையெல்லாம் மறக்கவில்லை.
மாறாக உண்மை வர வர நல்ல நீா் வீணாகிப்போவது போலவும், அதற்கு ஒரு படி மேலாய் பொய்யானது சாக்கடை கழிவு நீா்போல அதிகமாக கட்டுக்கடங்காமல் ஒடுவது போலவும் தொிவதே அச்சமானதுதான். அந்த கழிநீாில்தான் நாம் நடந்து செல்லவேண்டியுள்ளது.
அந்த நேரம் நாம் சகிப்புத் தன்மையோடுதான் வாழவேண்டியுள்ளது. வருவது அனைத்தையும் ஜீரணித்துக்கொண்டு மனதில் ஒரு வித நெருடலோடு வாழவேண்டிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும்.
வஞ்சகம், சூது, வாது, போன்றவை குறைய வேண்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உறவும், நட்பும், தொடர வேண்டும் மனிதன் மனதில் விசால புத்தி நிறையவே இருக்கவேண்டும். சகோதரத்துவம் பேச்சில் இருந்தால் போதாது, செயலில் இருப்பதே நல்லதாகும்.
நல்ல தூய்மையான நட்பு என்றும் அழியாதே! அதை அனைவரும் கடைபிடித்து ஒரு முகமாக வாழ்வதே நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமே! "நீ ஆடுகிற ஆட்டமும், ஓடுகிற ஓட்டமும் ஒருநாள் அடங்கும்போது, கூடுகிற கூட்டமே நீ யாா் என்பதை அடையாளம் காட்டும் என பட்டினத்தாா் சொன்னது நினைவில் வந்துபோகிறது"!