காதலிப்பதும் ஒரு ரசனை தான்!

Love also a good enjoying moment!
Love also a good enjoying moment!pixabay.com

குழந்தை தாய் மீது வைத்திருப்பது அளவிட முடியாத காதல் அது பாச காதல்!

காதலி காதலன் மீது வைத்திருப்பது அன்பு காதல்!

மனைவி கணவன் மீது வைத்திருப்பது வாழ்க்கை காதல்!

தாத்தா பாட்டி மீது பேரப்பிள்ளைகள் வைத்திருப்பது தலைமுறை காதல்!

நாம் வாழ்க்கையை எப்பொழுதும் காதலிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நொடியையும் ரசித்து ருசித்து எவனொருவன் இருக்கிறானோ அவன்தான் வாழ்க்கையில் நிம்மதியான மனிதன் சந்தோஷமான மனிதன்.

காதல் பற்றி பல அறிஞர்கள் பலவிதமான பொன் மொழிகளை கூறியுள்ளார்கள்.

காதல் என்பது அழகிய கனவு அன்று. காதல் என்பது கணநேரத்து உடலின்பமும் அன்று. காதல் என்பது இரண்டு மனங்களின் சேர்க்கை. இரண்டு புதிய மனிதர்களுக்கு ஒருவரை ஒருவர் பூரணமாக்குவதற்காக ஒரு விந்தையான தவிப்பு உண்டாகிறதே அதன் பெயர்தான் காதல் என்கிறார் ஒரு கவிஞர்.

முண்டாசு கவி பாரதியும் காதல், காதல், காதல், காதல் போயின், காதல் போயின் சாதல் சாதல் என்கிறார்.

பாவேந்தர் பாரதிதாசனும்

பாடாததேனீக்கள் உலவாத் தென்றல்

 பசியாத நல்வயிறு பார்த்ததுண்டோ ?

காதல் அடைதல் உயிரியற்கை 

அது கூட்டில் அகப்படில் தன்மையதோ? என்கிறார்.

காதல் என்பது ஒரு காய்ச்சலாகும். திருமணம் என்பது அதற்கு ஒரு மருந்தாகும் என்று எண்ணக் கூடாது. அவ்வாறு கொண்டால் திருமணம் முடிந்ததும் காய்ச்சல் தணிந்து போகும். காதல் என்பது ஒரு காய்ச்சல் அன்று. பூவின் மணம்போல் அது ஒரு இயற்கை சக்தி. ஆறாத சக்தி. சில சமயம் இது தானாக பொங்கும். இல்லாவிட்டால் மின்சார சக்தி போல் நாம் உண்டாக்கி வளர்த்துக் கொள்ளலாம் என்கிறார்  மூதறிஞர் ராஜாஜி.

இதையும் படியுங்கள்:
கோதுமையில் இத்தனை நற்குணங்களா? தெரியாம போச்சே!
Love also a good enjoying moment!

காதல் உலகம் விந்தையானது. முதல் கணம் அங்கே இடி இடிக்கும். அடுத்த கணம் தென்றல் உலவும் அழுகைக்கும் சிரிப்புக்கும் அதிகமான வேற்றுமை இல்லை. கண்ணீரின் முதல் சொட்டு துன்பமாகவும் அடுத்த சொட்டு இன்பமாகவும் இருக்கும் என்கிறார் அகிலன்.

காதலர் தினத்தன்று மட்டும் காதலை நினைக்காமல் வாழ்நாள் பூராவும் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டு அது தாய் தந்தை ஆனாலும் சரி தாத்தா பாட்டி ஆனால் சரி உறவுகளோடும் சரி, நண்பர்களோடும் சரி காதல் கொண்டு வாழ்ந்தால் என்றுமே வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com