கோதுமையில் இத்தனை நற்குணங்களா? தெரியாம போச்சே!

So much goodness in wheat?
So much goodness in wheat?https://tamil.goodreturns.in

பொதுவாக எல்லாவிதமான தானியங்களும் நோய்களை எதிர்த்துப் பாதுகாக்கும். இவற்றில் கோதுமையின் பங்கு அதிகம். 300க்கு மேற்பட்ட தாவர இனங்களில் புல் வகையைச் சேர்ந்த தானிய உணவான கோதுமையே பெரும் பங்கு வகிக்கிறது. மாவு, ரொட்டி, பிஸ்கட் என யாவும் கோதுமையில்தான் தயாராகிறது.

கோதுமை, உங்கள் உடலில் நேர்மறையான பாதிப்புகளை மட்டும்தான் ஏற்படுத்துகிறது. இதில் உள்ள செலினியம் உடலுக்குக் கேடு விளைவிக்கும் தொற்றுகளுக்கு எதிராக செயல்படும் முக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது தலைமுடி வறண்டுபோகாமல் தடுக்கிறது. பொடுகு தொல்லையில் இருந்து காக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து மற்றும் வைட்டமின் இ தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயோதிகத்தை தாமதமாக்குகிறது. சருமத்தை தளராமல் இருக்க வைக்கிறது.

கோதுமையில் உள்ள நார்ச்சத்து, உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. முக்கியமாக, இது செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியல் தன்மை, செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது, உடல் எடை குறைவதற்கும், உடல் பருமன் ஆபத்தையும் குறைக்கிறது. கோதுமை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. ஒருவர் மூன்று வேளையும் கோதுமை உணவுகளை எடுத்துக்கொண்டால், அவரது உடல் எடை சரியாகப் பராமரிக்கப்படுகிறது. கோதுமையில் வைட்டமின்கள், நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் இரும்பு, புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, ஆபத்தான பாக்டீரியாக்களை நீக்குவதால், கழிவு நீக்கத்துக்கு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. தலைவலி, மூட்டுவலி மற்றும் வயிறு உப்புசம் போன்றவை நீங்குகிறது.

அழற்சி பிரச்னையால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக உள்ளது. அழற்சி பல நீண்ட நாள் வியாதிகளுக்கு காரணமாகிறது. கோதுமை உணவை பயன்படுத்துவதால், அழற்சி குறைகிறது. நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்தையும் குறைக்கிறது. கோதுமையில் உள்ள வைட்டமின் பி மற்றும் இ உடலுக்கு சக்தியை அளிக்க உதவுகிறது. ஆரோக்கியமான டிஎன்ஏவை பராமரிக்கிறது. வைட்டமின் டியில் 8 வகை வைட்டமின்கள் உள்ளன. இவையனைத்தும் நீரில் கரையக்கூடிய தன்மை கொண்டவை. மூளையில் அழற்சியை அகற்ற வைட்டமின் பி சத்துக்கள் நமது உணவில் கட்டாயம் இருக்க வேண்டும். நினைவாற்றல் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதற்கு வைட்டமின் இ உதவுகிறது.

கோதுமை உணவுகள் இதய நோய் ஆபத்து ஏற்படுவதை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்துக்கு ஒரு நாளின் மூன்று வேளையும் கோதுமை உணவை எடுத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க கோதுமை சிறந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கைவிரல் நகத்தை வைத்து ஒருவரின் குணநலனை கண்டறிவது எப்படி தெரியுமா?
So much goodness in wheat?

சரும புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்க உங்கள் உணவில் கோதுமையை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள செலினியம் சரும புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. இது சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, பளபளப்பாகவும் வைத்துக்கொள்கிறது. கோதுமையில் உள்ள வைட்டமின் பி சத்து, மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள மெக்னீசியம், போஸ்ட் மென்ஸ்ட்ரூவல் சிண்ட்ரோம் ஏற்படுத்தும் பதற்றம் மற்றும் வலியை போக்குகிறது. பிஎம்எஸ் அறிகுறிகளையும் குறைக்கிறது.

முளைவிட்ட கோதுமையை மாவாக மாற்றி சப்பாத்தி செய்து சாப்பிட, பெருங்குடல் உட்பட பல புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படுகிறது. சோளம், ஓட்ஸ் முதலியவற்றில் உள்ள நார்ச்சத்தை விட கோதுமை வீரியமானது. கோதுமையின் மேல் தோலில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலுக்கு மிகவும் நல்லது. எனவே கோதுமையை அரைத்தவுடன் சலித்து வைக்காதீர்கள். நரம்பு மண்டலம் மற்றும் புதிய செல் உற்பத்திக்கு உதவும் மண்ணீரல் நன்கு செயல்பட மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க உதவும் தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட உதவும் ‘பைரிடாக்ஸின்‘ சலிக்கப்படாத கோதுமை மாவில்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com