அன்பு, நேர்மையே உண்மையான ஆன்மிகம்: நாம் வாழ வேண்டிய வழி!

Being friendly with others
Honesty is true spirituality.
Published on

நாம் நமது வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய பல விஷயங்கள் உள்ளன. நம்மால் நிறைய விஷயங்களை, நல்ல பல காாியங்களை செய்ய முடியாமல் போகலாம். நிறைவேற்ற முடியாமலும் போகலாம்.  இதனிடையில்  சில நல்ல விஷயங்கள் நம்மோடு பிண்ணிப் பிணைந்துள்ளன என்பதும் நிஜமே!

சில விஷயங்களை நாம் செய்துவிட்டு. நான் அதைச்செய்தேன், இதைச்செய்தேன், என கூறுவதும் உண்டு. அதாவது உதாரணமாக நான் ஆன்மிக எண்ணம் கொண்டவன். தினசரி கோவிலுக்குப் போகிறேன். இறைவனுக்கு சில சமயங்களில் அர்ச்சனை செய்கிறேன். சமயத்தில் அன்னதானம் எனக்கேட்டால் முடிந்த தொகை சொற்ப அளவில் தருகிறேன், நான் கடவுள் பக்தி உடையவன் என்றெல்லாம் சொல்லுபவர்களும்  உண்டு.

அவையெல்லாம் சரிதான் அது மட்டும் ஆன்மிகமாகாது. அடுத்தவர்களை நேசிப்பது.  பிறர் சொத்துகளுக்கு ஆசைப்படாதது. அடுத்தவர் வளா்ச்சி கண்டு பொறாமை குணம் கொள்ளாதது.

நாம் மட்டுமே வாழவேண்டுமென்ற சுயநல எண்ணம் கொள்ளாதது.

அடுத்தவர்களிடம் நட்பாய் பழகுவது.

வஞ்சக எண்ணம் கொள்ளாமல் இருப்பது. இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது.

உண்மை பேசுவது.

எப்போதும் நோ்மை தவறாமல் இருப்பது.

உறவுகள் நட்புகளிடம் நியாயமாக பழகுவது. 

பொியவர்களுக்கு மரியாதை செய்வது.

அடுத்தவர்கள் உணர்வுகளை மதிப்பது. 

இதையும் படியுங்கள்:
விமர்சனங்களைக் கண்டு பயமா? இந்த கட்டுரை உங்கள் வாழ்க்கையை மாற்றும்!
Being friendly with others

இப்படி இன்னமும் நியாயமான பல  விஷயங்களை கடைபிடித்து வாழ்ந்துவருவதும் கூட நியாயமான ஆன்மிக சிந்தனையைத்தான்  குறிக்கும். அதுவும் ஒரு வகையான ஆன்மிகமே!

ஆகவே தர்ம சிந்தனை எங்கெல்லாம் உள்ளதோ, ஈவு இறக்கம் எங்கெல்லாம் கடைபிடிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இறைவன் நிறைந்திருப்பான், என்பதை நாம் உணரவேண்டும்.

சைக்கிளில் பயணிக்கிறோம், அதில் முன்சக்கரம் எந்தவிதமான ஆதாரமும் உந்துதலும் இல்லாமல் பின்சக்கரத்தின் இயக்கத்தால் ஓடுகிறது. அதற்கான பெடல் கட்டையில் நமது கால்களின் உந்துதலால்  சைக்கிள் இயங்குகிறது.

அதேபோலத்தான் இறைவன்  துணையில்லாமல் எதுவும் நடப்பதில்லை என்பதை உணர்ந்தாலே எல்லாம் நல்ல விதமாக நடக்கும் என்பதை உணர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com