

அன்பையும், செயலையும் போதித்த இந்தியாவில் தலைசிறந்த ஆன்மீக துறவிகளில் மகாவீரரும் ஒருவர்.
அரச குடும்பத்தில் பிறந்து ஆன்மீக நாட்டத்தால் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். மகாவீரர் சமண சமயத்தை உலகிற்கு அறிமுகம் செய்த ஜைன மதத் துறவியாக மகாவீரரின் போதனைகளும், தத்துவங்களும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அன்பையும், மனித நேயத்தையும் போதிக்கும் உன்னதமான கோட்பாடுகளைக் கொண்டது மகாவீரரின் போதனைகள். அவர் ஜீனர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஜுனர் என்றால் வெற்றி கொண்டவர் என்பது பொருள். இப்படிப்பட்ட மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தி என ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
மகாவீரர் உலகிற்கு போதித்த போதனைகள் சிலவற்றை பார்ப்போம்.
எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாமல் இருத்தல், உண்மையை மட்டுமே பேசுதல், திருடாமை, பாலுணர்வு கொள்ளாமை, செல்வங்கள் மீது பற்று கொள்ளாமல் இருப்பது ஆகிய ஐந்தும் ஜைன மதத்தின் உறுதிமொழிகள் ஆகும்!
எந்த துன்பங்களில் இருந்தும் விடுபட, சரியான நம்பிக்கை, சரியான அறிவு, சரியான நடத்தை ஆகிய மூன்றும் தேவை. இந்த மூன்றுக்கும் திரி ரத்தினங்கள் என்று பெயர்!
தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேச்சிலும், செயலிலும் பின்பற்றுதலுக்கு பெயரே வாய்மை!
கர்மா என்பது பிறப்பில் துவங்கி இறப்பு வரை தொடரக்கூடியது. அதுவே துன்பத்திற்கான காரணமாகும். யாராலும் கர்மாவில் இருந்தது தப்பிக்க முடியாது!
எந்த உயிர்களையும் கொல்லாதே! துன்புறுத்தாதே! அஹிம்சையே மிகப்பெரிய மதம்.
இன்பத்திலும், துன்பத்திலும் எல்லா உயிரினங்களையும் நம்மை போலவே கருத வேண்டும்!
கோபம் அதிக கோபத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. ஆனால் மன்னிப்பும், அன்பும் அதிக மன்னிப்பு மற்றும் அன்பிற்கு வழிவகுக்கும்!
வாழுங்கள் பிறரையும் வாழ விடுங்கள்: உயிர் அனைத்து உயிர்களுக்கும் சமமானது!
யாருடைய வாழ்வாதாரத்தையும் பறிக்காதீர்கள்!
அது மிகப்பெரிய பாவம். அனைவரும் எனது நண்பர்கள், எனக்கு எதிரிகள் என எவரும் கிடையாது என எண்ணம் கொள்ளுங்கள்!
தவம் என்பது உடலின் செயல்கள்.
பொய் பேச்சு என்பது பேச்சின் செயல் உலகத்தில் மீதான வெறுப்பு என்பது மனதின் செயல்!
உண்மையின் பாதையில் நடப்பவர்களுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை!
ஏமாற்றுதல் என்பது மிகச் சிறிய முள். பழகிவிட்டால் அது பிடுங்கி எறிவது கடினம்!
அகந்தையை அழித்து விட்டால். அடக்கம் தானாகவே வந்து விடும்!