உறவுகளைப் பேண உதவும் முக்கிய நான்கு பண்புகள்!

Motivational articles
Maintain relationships...
Published on

வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் காணவும் வாழும் வரையில் நீதி நெறிமுறையுடன் மனசாட்சிக்கு பயந்து  பிறருக்கு தீங்கு செய்யாமல் வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த விஷயத்தையும் அலசி ஆராயாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாட்டினை தவிா்த்து வாழ்வதே சிறப்பான ஒன்றாகும்.

அப்படிப்பட்ட வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் சில நேரங்களில் சின்னச்சின்ன தவறுகளை செய்து விடுவதும் இயல்புதானே!

அதை நாம் நிதானித்து ஏன் இப்படி நடந்துகொண்டோம் என யோசனை செய்வதோடு  தவறு நம்மிடம் இருந்தால் அதை நாமே திருத்திக்கொள்ளவேண்டும் அதுவே நல்லது. நாம் கடைபிடிக்க வேண்டிய பல நெறிமுறைகளில் குறிப்பாக நான்கு விஷயங்களை கவனமாக கையாளவேண்டும் அது நம்மிடமே உள்ளது.

நம்மை நேசிப்பவர்களைபாராட்டுங்கள்:

பொதுவாக நேசம், பாசம் என்பது நம்மிடம் இயற்கையாக வளர வேண்டும். அகம்பாவத்தை தொலைத்து அன்பை நிலைநாட்ட வேண்டும்.நம்மிடம் அளவு கடந்த மரியாதை அன்பு பாசம் காட்டும் நபர்களிடம் நம்மை நேசிப்பவர்களை அவர்களின் குணங்களை  மனதார பாராட்டுங்கள். அது உறவோ நட்போ எதுவானாலும் அன்பே பிரதானமாகும். அன்பு காட்டக்கூடிய, அன்பு செலுத்தக்கூடிய இடங்களில் தெய்வம் வசிக்கும் என்பாா்களே!  அன்பால் எதையும் சாதிக்கலாமே! அது விலை மதிப்பில்லாததாயிற்றே!

இதையும் படியுங்கள்:
வாழ்வின் இன்பத்துக்கு அடிப்படை: நண்பர்கள் என்னும் அற்புதம்!
Motivational articles

தேவைப்படும் நபர்களுக்கு உதவி செய்யுங்கள்:

நம்மிடம் பழகும் உறவு, மற்றும் நட்பு வட்டங்களில் சிலர் நொடித்துப்போய்விடுவாா்கள். அவர்களது  முன்னோா்கள் மூலம் நமது முன்னோா்கள் ஏதாவது ஒரு வகையில் பல உதவிகளைப் பெற்றிருப்பாா்கள்.  அவர்களையோ அவரது வாாிசுகளையோ நாம் நன்றி உணர்வுகளுடன் பழசை மறக்காமல் அவர்களது தேவை அறிந்து நமது சக்தியை மீறாமல் உதவி செய்யவேண்டும்,

அது மிகவும் சிறப்பானது. அவர்கள் வாழ்ந்து கெட்டவர்களாக இருந்தால்  ஒதுக்கிவிடாதீா்கள். அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்களேன். அதற்கு நாள் நட்சத்திரமா பாா்க்கவேண்டும்?

காயப்படுத்தும் நபர்களை மன்னித்து விடுங்கள்:

தொிந்தோ தொியாமலோ சில சந்தர்ப்ப சூழ்நிலையில், சிலர் கோப உணர்வில், நமது உறவு தொடரவேண்டும் என்ற நோக்கம் மறந்து, அவர்களை அறியாமலேயே நம்மை காயப்படுத்திவிடுவாா்கள்.

பிறகு ஒரு சந்தர்பத்தில் அவர்களிடம் காரணம் கேட்டு அவர்களை மன்னித்து விடுங்களேன். மன்னிப்பு தமிழில் நமக்கு பிடித்த வாா்த்தையாக இருக்கட்டுமே! மனிதனின் குணத்தை வெறுக்கலாம் அது தவறல்ல ஆனால் மனிதனையே அடியோடு வெறுக்கவேண்டாம் சரிதானே!

விலகிச்செல்பவர்களை மறந்து விடுங்கள்:

நாம் நமது உறவு மற்றும் நட்பு வட்டங்களுக்கு உதவி செய்திருப்போம். காலச்சூழலில் அவர்களுக்கு கொஞ்சம் வசதி வந்ததும், சுயநலம் கருதி நம்மைவிட்டு விலகிச் செல்வாா்கள்.  அது சமயம் நாம் மனமாச்சர்யம் கலைத்து, அவர்களை விட்டு விலகிவிடுவதே நல்லது.  நன்றி மறந்த இவ்வுலகில் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். அதன் அர்த்தம் புாிந்து பக்குவம் கடைபிடித்து வாழ்வதே சிறந்ததாகும்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா?
Motivational articles

ஆக, இந்த நான்கு கொள்கைகளை கடைபிடியுங்கள், கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் புாிந்துகொண்டு வாழ்வதே நலமும் நன்மையும் கொடுக்கும். அதை கவனத்தில் கொள்வோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com