அன்பை பலமாக்குங்கள். எதிர்ப்புகளை வெற்றியாக்குங்கள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

லகில் அன்பு பெரிதா, அறிவு பெரிதா என்றால்  அன்புதான் என  சொல்வார்கள். அன்பை மட்டும் வைத்துக்கொண்டு  அறிவிலியாக இருப்பவனை உலகம் மதிக்காது. உலகையே கலக்கிய ஜுராசிக் பார்க் திரைப்படம்.  அதை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு முறை சொன்னார்" என் கனவுகள்தான் என் கதைகள். கனவுக்குள் தட்டும் பொறியை தந்தான் படமாக்குகிறேன். கனவிற்கு நன்றி என்றார்.

ஒரு ஓவியம்.  ஒரு கோட்டின் வளர்ச்சியே ஓவியம். கிறுக்கல்களுக்கு  யாரும் மரியாதை செய்வதில்லை. அது ஓவியமானால்தான் மதிப்பு. அந்த புகைவண்டி ஓவியரின் பெயர் ஸ்டீபன்சன்.  நிலக்கரி சுரங்கத்தில் சொற்பமான வேலை. நிலக்கரி தோண்டும்போதே சிந்தனைக்கும் போய்விடுவார். வேலை நேரத்தில் நின்று கொண்டு தூங்கும் சோம்பேறி என வசை விழும்.  நீராவி யந்திரங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். நீராவி யந்திரத்தை வைத்து ஒரு வண்டியை தயார் செய்து ஓட்டினால் நன்றாக இருக்குமே என்றார். 

எல்லோரும் சிரித்தார்கள் "பைத்தியக்காரா நீராவி யந்திரங்கள் கடினமானவை.  இதை வண்டியில் தூக்கி ஏற்றினால் வண்டி தரையில் பதிந்து சட்னியாகுமே தெரியாதா என்றார்கள். மீண்டும் ஸ்டீப‌ன்சன் கனவை விவரித்தார். எல்லோரும் சிரித்தார்கள். "நான் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் வேலை. என்னைப்பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதல்ல" என்ற டால்ஸ்டாயின் கூற்று ஸ்டீபன்சனின் காதில் எதிரொலித்தது. அவர் முயற்சியை விடவில்லை.

கடின முயற்சி. கண்டுபிடிப்புக்கான முழு அர்ப்பணிப்பு. . பசி, தூக்கம், தாகம் மறந்த பலவருட உழைப்பு. எண்ணங்கள் செயலாகியது.  நீராவி யந்திர உதவியுடன் அவர்  புதிய ரயில் வண்டி தயாரித்தார். அது தண்டவாளங்களில் மீது தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. முதலில் அதன் வேகம் இருபது மைல். ஆனால், இன்று?

இதையும் படியுங்கள்:
வெற்றிக்குத் தேவை எதிர்நீச்சல்!
Motivation article

மக்கள் ஆவென வாய் பிறந்தார்கள்.  இப்போது அவன் சுறுசுறுப்பானவனாகத் தெரிந்தான்.  அவனது தூக்கம் கூட சிந்தனையாக பேசப்பட்டது. எந்த சாதனைக்கும்  முதலில் நக்கல்கள், கேலிகள், மனதை உடைய வைக்கும்.  வீண் வாதம், முரண்பாடுகள் ஓடோடி வரும். கூடவே தோல்விகளும் முகம் காட்டும். எதிர்ப்பு எங்கு இல்லையோ அங்கு வெற்றி இல்லை.  அறிவை விரிவாக்கி, அன்பைப் பலமாக்குங்கள். எதிர்ப்புகளை வெற்றியாக்குங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com