நிகழ்காலத்தை நிகழ்கின்ற காலமாக்குங்கள்!

Motivation image
Motivation imageImage credit - pixabay
Published on

னிதர்களின் வாழ்க்கையில் நேரம் மிகவும் இன்றியமையாதது. நேரத்தை அலட்சியப்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் எல்லாம் நேரம் என்று சொல்லுவார்கள். ஆம், நீங்கள் எந்த நேரத்தில் (சரியான நேரத்தில்) நல்ல செயல்களைச் செய்கின்றீர்களோ அதுதான் நல்ல வழியினை நமக்குக் காட்டிவிடும்.

வாழ்க்கையில் நேரம் வரும் என்று காத்திருக்கக் கூடாது . வருகின்ற நேரத்தினை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு நிமிடமும் நம்மைத் தாண்டியே செல்கின்றது.

ஒவ்வொருவரின் கையில் இருக்கும் நாள் இன்று மட்டுமே. நேற்று என்பது இறந்த காலம். நாளை என்பது எதிர்காலம். இன்று என்பது மட்டுமே நிகழ்காலம். இன்றையப் பொழுதை நல்ல பொழுதாக மாற்ற நல்ல எண்ணங்களை செயல்வடிவமாக்கி இன்றே பயன்படுத்துவீர்.

வாழ்க்கையில் ஒவ்வொரு மணிநேரமும் நல்ல நேரமே ஒவ்வொரு நாளும் நல்ல நாளே, ஒவ்வொரு வருடமும் நல்ல வருடமே, வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நல்ல நொடியே. ஒவ்வொரு நொடியையும் நல்ல செயலில் செயல்படுத்துங்கள். காலதாமதம் இன்றிச் செய்யுங்கள். எல்லாச் செயலையும் நன்மைக்காகவே செய்யுங்கள்.

வாழ்க்கையில் நன்மை செய்தவர்கள்தான் மனிதர்கள். மனிதர்களின் செயலும் நன்மை செய்வதாக அமையவேண்டும். அதுவும் இன்றே அமைய வேண்டும். வாழ்க்கையில் உங்களுக்காக ஏதுவாயினும் காத்துக் கொண்டிருக்கும். நேரம் மட்டும் காத்துக்கொண்டிருக்காது.

சரியான நேரத்தில் சரியான செயலைச் செய்தால், நேரத்தினை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்களுக்குக் கிட்டாத எதுவாயினும் கிட்டும். நேரத்தினை சரியான முறையில் பயன்படுத்துங்கள்.

நல்ல செயல்கள் செய்யும்போதும், உடனடியாக எந்தச் செயலைச் செய்யவேண்டும் என்று பிரித்துப் பார்த்து நல்ல செயல்களைச் செய்யுங்கள். நல்ல செயல்கள் என்பது, உங்களை உயர்த்திக் கொள்ளுவதும், பிறரை உயர்த்துவதும், பிறர்க்கு உதவி செய்வதும், கற்றுக்கொள்வதும் ஆகும்

வாழ்க்கையில் சிறிய வயதில், நேரத்தினை நல்ல முறையில் பயன்படுத்தினால்தான், பின்காலங்களில் நல்ல பலனைப் பெறமுடியும். பின் வாழ்க்கையில் நல்ல அனுபவம் கிடைக்கும். எந்த இடத்திற்கு செல்லும்போதும் நேரம் முக்கியமானதாகப் பாருங்கள். காலதாமதமின்றி சரியான நேரத்திற்குச் செல்லுங்கள்.

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கான சில வழிமுறைகள்!
Motivation image

தேவையில்லாதவைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருக்காதீர்கள். ஒரு சில செயலை பேசும் நேரத்தில் செய்து விடலாம். நமது வாழ்க்கையில் இன்று முதல் எல்லாம் நல்லதாக இருக்கவேண்டும் என்று எண்ணக் கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள்.

நாம் Present-ஐ எல்லாம் Past ஆக்கிவிட்டு Future-ஐ நினைத்து வருத்தப்படுகின்றோம். Past is Past-ஆக இருக்கட்டும். இறந்த காலம் இறந்த காலமாகவே இருக்கட்டும். நிகழ்காலத்தை நிகழ்கின்ற காலமாக செயல்படுத்தினால் நமக்கு எதிர்காலம் நம் கையில் இருக்கும்.

நேரத்தை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்தப் பழகுங்கள். எந்த நல்ல செயல்களையும் தள்ளிப் போடாதீர்கள். நல்ல செயல்களையெல்லாம் இன்றே முடித்துவிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com