வாழ்க்கைப் பாடத்தை சிறப்பாக மாற்ற உதவும் கணிதம்!

Maths
Maths

நாம் பள்ளியில் படிக்கும் கணிதப் பாடம், பள்ளிப் படிப்போடு முடிந்து விடுவதில்லை. அது நம் வாழ்க்கைக்கும் பெரிதும் பங்காற்றுகிறது. அவ்வகையில் நம் வாழ்க்கைக்கு எந்த வகையில் கணிதம் உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

நம் அன்றாட வாழ்விலும், அறிவைச் சார்ந்த அனைத்து இடங்களிலும் கணிதத்தின் பயன்பாடு மிக முக்கியப் பங்காற்றுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக திகழ்வதும் கணிதம் தான். கணிதம் விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல. சாதாரண மனிதர்களுக்கும் உதவக் கூடியது. அன்றாட வாழ்விலும், நாம் செய்யும் வேலையிலும் நமக்கே அரியாமல் கணிதத்தின் பயன்பாடு முக்கியப் பங்காற்றி வருகிறது.

கொடுக்கல் வாங்கலில் தொடங்கி வியாபாரம், பயணச்சீட்டு, வங்கிப் பயன்பாடு மற்றும் நமது அன்றாடத் தேவைகள் என அனைத்திலும் கணிதம் இடம் பெற்றிருக்கிறது. அனைவருக்கும் பொதுவான ஒரு மொழி தான் கணிதம். தினந்தோறும் நம்முடைய ஒவ்வொரு நகர்விலும் கணிதமானது நம்மையே அறியாமல் பயன்பட்டு வருவதை எவராலும் மறுக்க இயலாது.

பொறியியல், அறிவியல், மருத்துவம், சமூக அறிவியல் மற்றும் நிதியியல் போன்ற உலகின் பல முக்கியத் துறைகளில் துருப்புச் சீட்டாக கணிதம் பயன்படுகிறது. பயன்பாட்டுக் கணிதம், அவ்வப்போது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தூண்டவும், அவற்றை முறையாகப் பயன்படுத்தவும் உதவுகிறது. ஆகையால் கணிதத்தை புரிந்து கொள்வதில் சிரமப்பட்டால், மற்ற அறிவியல் நுணுக்கங்கள் மற்றும் விஞ்ஞானங்களைப் புரிந்து கொள்வதிலும் சிக்கல் ஏற்படும். படிக்கும் பருவத்திலேயே மற்ற பாடங்களைப் போலவே, கணிதப் பாடத்தையும் பரிந்து படித்தால் அது மிக எளிதாக இருக்கும். சிறுவயதில் இருந்தே கணிதத்தைக் கற்பதும், கற்பிப்பதும் நமது முக்கிய கடமையில் ஒன்றாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சுவாரஸ்யங்கள் நிறைந்த வாழ்க்கை சாத்தியமாவது எப்படி?
Maths

படிப்பறிவு இல்லாத ஊரில் கணிதத்தின் பயன் இதுதான் என்று தெரிந்தால், அது அந்த ஊரையே மாற்றி விடும் அளவிற்கு வல்லமைப் படைத்தது தான் கணிதம். மனிதனுக்கும், கணிதத்திற்கும் இடையே உள்ள பிணைப்பு எந்நாளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் இவை நான்கும் தான் கணிதத்தின் அடிப்படைத் தத்துவங்கள். நல்ல பழக்க வழக்கங்களை அதிகரித்துக் கொள்ள கூட்டல் தத்துவமும், தீங்கு விளைவிக்கும் கெட்ட செயல்களைத் தவிர்க்க கழித்தல் தத்துவமும், நியாயமான முறையில் பணத்தைப் பன்மடங்கு சம்பாதிக்க பெருக்கல் தத்துவமும், காலத்திற்கு ஏற்றது போல் நேரத்தை திட்டமிட, வகுத்தல் தத்துவமும் பயன்படுகிறது. இந்த நான்கு கணிதத் தத்துவங்களை நம் வாழ்க்கைப் பாடத்தில் முறையாகப் பயன்படுத்தினால், துன்பம் என்று ஒன்று வருவதையே முற்றிலுமாக தவிர்த்து விடலாம். மேலும் எந்நிலையிலும் வாழ்வை சமநிலையோடு வாழப் பழகினால், எந்நாளும் உங்களுக்கு தித்திக்கும் நன்னாளாக அமையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com