Motivation Image
Motivation Imagepixabay.com

அதிர்ஷ்டம் உங்களை தேடி வர வேண்டுமா?

ம்மில் சிலர் வாழ்க்கையில் தோல்வி வரும் போது இடிந்து போய் உட்கார்ந்து விடுவார்கள். அப்போது தங்களது அதிர்ஷ்டத்தின் மீது பழிபோடுவார்கள். "நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவு தான் " என்று. அதிர்ஷ்டம் என்பது ஒரு சக்தி, அது ஒருவருக்கு உற்சாகம் அளித்தால் அது நல்ல அதிர்ஷ்டம், அதனால் பாதகம் என்றால் அது கெட்ட அதிர்ஷ்டம். இது நமது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்.

 அதிர்ஷ்டமில்லாதவர்கள் தங்களது வாழ்வை அதிர்ஷ்டகரமாக மாற்றலாம். என்கிறார் ரிச்சர்ட் வைஸ்மேன் எனும் உளவியல் பேராசிரியர். "நீங்கள் அதிர்ஷ்டக்காரர் என்று நீங்கள் நம்பினால்தான் உங்களை அதிர்ஷ்டம் தேடி வரும்" என்கிறார். கிட்டத்தட்ட 1000 பேர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகள் எல்லாம் அவர்கள் தங்களை அதிர்ஷ்டசாலிகள் என நம்பியதால்தான் என்கிறார் வைஸ்மேன். எனவே நீங்கள் அதிர்ஷ்டசாலியாக, நீங்கள் ஓர் அதிர்ஷ்டக்காரர் என்று முதலில் நம்ப வேண்டும் என்கிறார்.

அதிர்ஷ்டம் உங்களை தேடி வர வேண்டுமா? சில அதிர்ஷ்ட விதிகளை கூறுகிறார் வைஸ்மேன். முதலில் வாய்ப்புகளை அதிகப்படுத்துங்கள். இரண்டாவதாக புதிய முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுங்கள், மூன்று உங்கள் உத்வேகம் சொல்வதைக் கேளுங்கள், அதை நம்புங்கள்.

அதிர்ஷ்டக்காரர்கள் எல்லாம் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில் வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தவர்கள்தான் என்கிறார். உலகப்புகழ் பெற்ற டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர். ஓப்ரா விட்னி. எனது வெற்றிக்கு இதுதான் காரணம் என்கிறார் இவர். "வாழ்க்கை என்பது வாய்ப்புகளை சந்திக்க நாம் தயாராகும் செயல்கள்தான்" என்கிறார் விட்னி.

ரிச்சர்ட் வைஸ்மேன்....
ரிச்சர்ட் வைஸ்மேன்....

 "உங்களை சுற்றி நடப்பவைகள், நீங்கள் பார்ப்பவைகள் எல்லாம் உங்களுக்கு ஏதோ ஒன்றை உணர்த்துகிறது என்று நம்பி அதை பின் தொடர்ந்து செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வர உதவும் ஒரு யுக்தி என்று நம்புங்கள் உங்களது தன்னம்பிக்கை வளரும்" என்கிறார் ஒரு  தன்னம்பிக்கை பேச்சாளர்.

சில மந்திரங்கள் அல்லது மூட நம்பிக்கைகள் கூட சில சமயங்களில் பாசிட்டிவ் உணர்வை உருவாக்கும் என்கிறார்கள் ஜெர்மனியின் காலின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஒரு கோல்ஃப் விளையாட்டின் போது சிலர் இந்த பந்து இருந்தால் அதிர்ஷ்டம் என்று நம்பி விளையாடினார்கள் அவர்களில் 10 க்கு 6 பேர் வெற்றி பெற்றார்கள். இந்த பந்து அதிர்ஷ்டம் இல்லை என்று சொன்னவர்கள் வெற்றி பெறவில்லை. காரணம் நம்பும் சில குருட்டு நம்பிக்கை கூட அதிர்ஷ்டம் தான் என்கிறார்கள் இவர்கள். சில விளையாட்டு வீரர்கள், சில நடிகைகள் சில கைபேண்ட்களை, நெக்லஸ் களை அணிந்து அதிர்ஷ்டம் என்று நம்பி வெற்றியும் பெறுகிறார்கள்.

"தினமும் செய்த வேலையையே செய்யும் இயந்திரம் அல்ல நாம், தினமும் புதிய புதிதாக ஆட்களை சந்தியுங்கள், எப்போதும் பயணிக்கும் பாதையிலேயே வாழ்க்கையை ஓட்டிச்செல்லாதீர்கள், உங்கள் வாழ்க்கை பாதையில் மாற்றங்களை கொண்டு வாருங்கள் கஷ்டமான நேரத்தில் கூட அதிர்ஷ்டம் வரும் என்று நம்புங்கள், அதிர்ஷ்டம் அது தானகவே வரும் "என்கிறார் சாரு கபூர் எனும் ஹீலர்.

இதையும் படியுங்கள்:
மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே நுழைய முடியும் கோவில் பற்றி தெரியுமா?
Motivation Image

அதிர்ஷ்டம் வரவேண்டுமா? புதிய முயற்சிகளில் இறங்குங்கள் , செய்த வேலையையே  செய்து முடங்கி கிடக்காதீர்கள். நமக்கு அதிர்ஷ்டம் இல்லையே என்று புலம்பாமல் , நல்ல காலம் பிறக்கும் என்று நம்பி வேலை செய்யுங்கள். வெற்றி உறுதி என்று நம்பி அடியெடுத்து வையுங்கள் அந்த நம்பிக்கையே அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.

அடுத்த முறை தோல்வியில் இடிந்து போய் உட்காரும் போது, உங்கள் அதிர்ஷ்டத்தின்  மீது பழிபோடாதீர்கள். வாழ்க்கையில் உயர்வும் இருக்கும், தாழ்வும் இருக்கும் அதை மாற்றும் விதி உங்களிடம் தான் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com