வெற்றிக்கு வழிவகுக்கும் நினைவாற்றல்: சாதித்தவர்களின் ரகசியம்!

Memory that leads to success
The secret of achievers
Published on

வ்வொரு துறையிலும் சாதித்து வெற்றி பெற்றவர்களிடம் பொதுவாக ஒரு குணம் முக்கிய பங்கு ஆற்றிருக்கும். அதுதான் ஷார்ப்பான நினைவாற்றல். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

14 வயதில் 1976 ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 10 க்கு 10 புள்ளிகள் பெற்று பர்பெக்ட் 10 (Perfect 10) என்ற அரிய சாதனை புரிந்தார் நடியா என்பவர். (Nadia Comaneci)

கணித மேதையாக திகழ்ந்த ராமானுஜன் இளம் வயதிலேயே கணிதத்தில் பல கடினமான கணக்குகளை தனது நினைவாற்றல் சக்தியால் சுலாபமாக தீர்த்து அசத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகபட்சமான 800 விக்கெடுக்கள் வீழ்த்தி சாதித்தவர் ஸ்ரீ லங்காவின் புகழ்பெற்ற ஸ்பின் பவுலர் முத்தையா முரளீதரன். இவர் தூசரா என்னும் வகை பந்து வீச்சை வீச கற்றுக்கொண்டு தொடர்ந்தார் போல் 18 மாதங்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு (net practice) தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பிறகுதான் அந்த வகை பந்து வீச்சை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பந்தயங்களில் வீசத்துவங்கினார்.

இப்படிப்பட்டவர்கள் பல நாட்கள் தேவைக்கு ஏற்ப கடுமையான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதை கடமையாக பின் பற்ற தவறவில்லை.

நினைவாற்றல் வளர முக்கியமாக தேவைப்படுவது ஆர்வம். ஆர்வத்தில் தொய்வு இல்லாமல் பயணிப்பது மிக முக்கியம். ஆர்வத்துடன் முயற்ச்சியும் உடன் பயணிக்க வேண்டும்.

எந்த வகை தடங்கல், பிரச்னைகள் இடையூராக வந்தாலும் ஆர்வத்தையும், முயற்சி செய்வதையும் கை விட்டு விடாமல் தொடரவேண்டும்.

நம்மால் கட்டாயம் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டால், கற்றவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற பவுர்புல் சக்தி தனாகவே நாளடைவில் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிடும். (integrated part)

இடைவிடா பயிற்சி மற்றும் முயற்சி இரண்டும் ஆரம்ப கால கட்டங்களில் எட்டாக் கனியாகத்தான் இருக்கும். அந்த எல்லையை அடையவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டு அயற்சி அடையாமல் பயணத்தை தொடங்குவது, தொடருவது முக்கியம். இத்தகையை முயற்சிக்கு உடன் வரும் முறையில் நினைவாற்றலை வளர்த்துக்கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
ஒரே ஒரு விரல்! ரஷ்யப் புரட்சியை மாற்றிய லெனின் மந்திரம்!
Memory that leads to success

அதற்குத் தேவையான பயிற்சியும் முழு ஈடுபாட்டுடன் தொடருவது கட்டாயம் தேவை. தேவையான சமயத்தில் நினைவு கூர்ந்து செயலில் ஈடுபட்டால்தான் சிறந்த ரிசல்ட்டை அடையமுடியும்.

குறிப்பிட்ட சமயத்தில் தேவைக்கு உரிய விவரங்களை நினைவில் கொண்டுவர முடியாவிட்டால் மொத்த முயற்சியும் பலனளிக்காமல் போவதற்கு சாத்திய கூறுகள் உண்டு.

நேர்மறை முடிவை பெற நினைவாற்றல் மிகவும் கூர்மையாக (sharp memory) இருப்பது சாலச்சிறந்தது.

முடியும் என்ற பவர்புல் சொல் இடை விடாபயிற்சி, முயற்சி துணைக்கொண்டு நாளடைவில் நினைவாற்றல் வேண்டிய சமயத்தில் கைகொடுக்கும் செயலை செவ்வனே செய்ய வைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com