motivation article
motivation articleImage credit - pixabay

நேர்மறை நகர்வுக்கு உதவும் வழிமுறைகள்..!

Published on

ங்கள் திறமையில் நம்பிக்கை வையுங்கள். சந்தித்து சாதிக்க போவது தாங்கள்தான் என்பதை உறுதிபட நம்புங்கள். வெற்றியோ அல்லது எதிர்மறை ரிசல்ட்டோ, அவற்றை எதிர்கொள்ள மனோதிடத்தை செம்மைப் படுத்துங்கள்.

வாழ்க்கைப் பாதையில் கடக்கிற ஒவ்வொரு சூழ்நிலையும் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. கற்றுக் கொள்ள தயங்காதீர்கள், மறக்காதீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தில் ரீப்ளேவுக்கு (Replay) இடம் கிடையாது என்பதை உணர்ந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களை உதறித் தள்ளாமல், அலட்சியை படுத்தாமல் உபயோகிக்க பழகுங்கள்.

நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பெரும்பான்மை யானவை, போனால் திரும்பி வராது (category) வகையை சார்ந்தவை என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்களுக்கு போட்டியாளர் நீங்களே என்ற ஸ்டைலில் செயல்பட்டால் அதன் பலனே தனிதான்.

பிறரின் தயவு இல்லாமல் முன்னேற முடியாது. பிறருக்கு உரிய மரியாதை கொடுக்க மறக்கவும் கூடாது. நன்றி உணர்வு (gratitude) தெரியப் படுத்துவதை மகிழ்ச்சியான கடமையாக கொள்ளவும்.

தயக்கம் ஒரு பெரிய தடைக்கல்லாக செயல்படுகின்றது என்பதை முதலில் நன்றாக உணருங்கள். புரிந்துக் கொண்டு அந்த தடைக்கல்லை தகர்த்து எறிய பாடுபடுங்கள். பயப்படுவதை தவிர்க்கவும்.

சங்கோஜப்படாமல் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், இவைகளை சுருக்கமாக்கவும், அழுத்தம் திருத்தமாகவும் எடுத்துவைக்க பழகுங்கள்.

அன்றாட முக்கிய உலக நடப்புக்கள் பற்றி அறிந்துக் கொள்வதை கட்டாயம் ஆக்கிக் கொள்ளுங்கள். உதவுவதும், உதவி பெறுவதும் உங்கள் முன்னேற்ற பாதையில் உங்கள் உடன் பயணிக்க செய்யுங்கள். கற்றுக் கொள்வதை, பிறருக்கு பகிர்ந்து அவர்களும் பயன் அடையை செய்யுங்கள். உளமாற பாராட்டுங்கள்.

தவறு செய்தால் அதை நினைத்து வருந்திக் கொண்டு இருக்காமல், அந்த தவறை தாங்கள் கற்க வேண்டிய பாடமாக கருத்தில் கொண்டு திருத்திக் கொள்ள பழகுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒரு புது பாடம் கற்பிக்க காத்துக்கொண்டு இருக்கிறது என்ற தோரணையில் எதிர்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
இழப்பு பெரிய தவறு இல்லை!
motivation article

பிறர் உங்களை கேள்விகள் கேட்க அனுமதியுங்கள். உற்சாகப் படுத்துங்கள். வரவேற்க பழகவும்.

இத்தகையை முறை மூலம் கற்றுக்கொள்வது மிகவும் சிறந்ததாகும். பிறரின் எண்ணங்கள், கருத்துக்கள், கண்ணோட்டங்கள் இவற்றின் மூலம் புதிய கோணத்தில் அறிந்துக்.கொள்ள வழி வகுக்கும்.

சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி செயல்பட வேண்டும் என்பதை கற்கவும், கற்றவற்றை செயல்படுத்தவும் அறிந்துக் கொள்வது இன்றைய போட்டி மிக்க வாழ்க்கையின் முக்கிய அம்சம்.

logo
Kalki Online
kalkionline.com