மனம் என்னும் மந்திரக் கோல்

Mind is the magic wand!
Lifestyle articles
Published on

னம் ஒரு மந்திரகோல். அதைக் கொண்டு நம் மனதை மட்டுமல்ல இந்த உலகத்தையே நம்மால் திறக்க முடியும். மனம் பல அவதாரங்கள் எடுக்கும். மனம் நினைத்தால் இலவம் பஞ்சு போல் லேசாகி பறக்கலாம்.

கவலைகளையும், பிரச்னைகளையும் மறக்கலாம். சித்தர்கள் மனத்தை குரங்குடன் ஒப்பிடுகிறார்கள். மனம் ஒரு குரங்கு. நினைத்த நேரத்துக்கு நினைத்த இடத்திற்குச் சென்று விடும். ரொம்ப ஆட்டம் போடும் மனதை அடக்குவது என்பது சாதாரணமான விஷயமல்ல. 

மனம் மகிழ்ச்சியாக மாற ஒரே ஒரு மருந்து உற்சாகம்தான். உற்சாகத்துடன் எந்த வேலையையும் செய்தால் சுலபமாக முடித்து விடலாம். உற்சாகம் என்பது ஒரு தொற்று நோய். ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் தொற்றிக் கொள்ளும். நம்மை நாமே ரசிக்கக் கற்றுக் கொள்வதும், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுவதும், நம் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கவும் முயல வேண்டும். 

நமக்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயங்களை அனுதினமும் மற்றவர்களுக்கு இடையூறு வராமல் செய்யப் பழகிவிட்டால் மனதுக்கு பாரம் என்பது இல்லை. இலவம் பஞ்சு போல் மென்மையாக பறக்கும். அதைத் தேவையில்லாமல் முடக்கிப் போடுவது தவறு. மனம் என்னும் குதிரைக்கு கடிவாளம் போட்டு சந்தோஷமான தருணங்களை அதற்கு தீனியாகத் தர மறுப்பதால் தான் சிலருக்கு எதிலும் உற்சாகமோ, குதூகலமோ இல்லாமல் போகிறது.

மனம் ஒரு மந்திரக்கோல். எந்தத் துன்பம் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று புரிந்து வாழ கற்றுக்கொள்வது சிறப்பு. "மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம். வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்" கண்ணதாசனின் அருமையான பாடல்  வரிகள். கண்களுக்கும், புலன்களுக்கும் புலப்படாத மனம் சாமானிய மனிதன் முதல் சர்வாதிகார மனிதன் வரை அனைவரையும் ஆட்டுவிக்கும் சிறந்த மந்திர கோலாகும். அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்துதான் அமையும்!

மனம் என்னும் மாயக் கண்ணாடியை அணிந்துகொண்டு இவ்வளவு நாட்கள் நாம் நிறைய விஷயங்களை இழந்திருப்போம். நல்ல உறவு, நல்ல நட்பு, நல்ல மனிதர்கள், ஏன் சில சமயம் நம்மையே நாம் இழந்திருப்போம். இனி இவற்றையெல்லாம் எறிந்துவிட்டு இயல்பாயிருக்க பழகுவதும், பிடித்ததை செய்வதும், மற்றவர்களை மனதார பாராட்டுவதும் நமக்கு மட்டுமல்ல எதிர் தரப்பினருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தரும். மனம் ஒரு மந்திரக்கோல். அதைக்கொண்டு நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

நம் சந்தோஷம் நம் கையில்தான் உள்ளது. மனம் ஒரு மந்திரக்கோல். மகிழ்ச்சிதான் அதற்கு திறவுகோல். நன்மைகள் நம்மைத் தேடி வர எந்த நிலையிலும் நமக்கு நாம் உண்மையாய் இருப்பதுடன் உற்சாகமாகவும் இருக்க வேண்டும். நாம் ஒன்றை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோமோ அது அப்படித்தான் இருக்கும். எனவே மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும், நாமும் மகிழ்ச்சியாக இருப்போம். 

இதையும் படியுங்கள்:
உங்கள் திறமை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லைன்னா எப்படி?
Mind is the magic wand!

மன அழுத்தம் என்பது இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னையாக உள்ளது. உடலை விட மனரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம். இதற்கு வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டு நம் மனதை எப்பொழுதும் உற்சாகமாகவும்,  மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள பழக வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க இந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகம் என்னும் மந்திரக்கோல் உதவும். இந்த மந்திரக்கோல் மன அமைதியும், நேர்மறை சிந்தனையையும் தரும்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! மனம் மனம் அது கோவிலாகலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com