ஈகோ: குடும்பங்களைச் சிதைக்கும் மௌனப் போர்!

நவீன நாகரீகத்தால் விரிசலடையும் குடும்ப உறவுகள் மற்றும் ஈகோவின் ஆதிக்கம் பற்றிய ஒரு முக்கிய விழிப்புணர்வு பார்வை.
ஈகோ | husband ad wife fight and sad child
ஈகோ | husband ad wife fight and sad childAI Image
Updated on

இரண்டு எழுத்தான ‘ஈகோ’ காரணமாக குடும்ப உறவுகள் சிதைந்து வரும் நிலையை இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. கூட்டுக்குடும்ப மரபு, விட்டுக்கொடுத்துப் போகும் பண்பு, பாட்டி அம்மா செய்த உணவின் வாசம், நேரில் சந்திக்கும் உறவுகள் அனைத்தும் மொபைல், சமூக வலைத்தளங்கள், நவீன வாழ்க்கை அழுத்தத்தில் மறைந்து போனதை எழுத்தாளர் வேதனையுடன் விவரிக்கிறார்.

இரண்டு எழுத்து. ஆம் இரண்டே எழுத்துதான். அதன் ஆதிக்கமே பல குடும்பங்களில் உறவு முறைகளில் விாிசல் விழவைத்து விட்டது. இதில் யாரையும் யாரும் குற்றம் சொல்வதற்கில்லை.

அவசர உலகம் அபரிமித விஞ்ஞான வளா்ச்சி, செல் ஃபோன் ஆதிக்கம், சில சினிமாக்கள், லாஜிக்கை மீறிய மெகாதொடர்கள், நாகரீக மோகம், சில குடும்பங்களின் நிறைய வருமானம். இதையும் தாண்டி பல்வேறு விஷயங்கள் வட்டமடிக்கின்றன.

அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பத்தில் இருந்த விட்டுக்கொடுத்துப் போகும் கலாச்சாரம் காணாமல் போய் விட்டதே!

உறவு முறைகள் நோில் சந்திக்க இயலாமல் வாட்ஸ் ஆப், இன்ஸ்டா, டுவிட்டர், என சுத்த ஆரம்பித்துவிட்டதே,

விறகு அடுப்பில் வியர்க்க வியர்க்க பாட்டி, அம்மா, அத்தை, செய்த அறுசுவை உணவுகளின் வாசம் காணாமல் போய் விட்டதே!

பற்றுதல், பாசம், அன்பு, அரவணைப்பு அனைத்தும் கானவில்லை லிஸ்டில் தேடப்படும் ரகங்களாய்!

ஈகோ | husband ad wife fight and sad child
ஈகோ | husband ad wife fight and sad childAI Image

கணவன் மனைவிக்குள் சண்டை அதில் முதலில் மனைவி பேசட்டுமே என கணவனும், கணவன் பேசட்டுமே என மனைவியும், ஈகோ பாா்ப்பதன் விளைவு மூன்றாம் நபரின் தலையீடு உள்ளே புகுந்துவிடுகிறதே!

அண்ணன் தம்பிக்குள் சச்சரவு, கருத்து வேறுபாடு, யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து போகலாமே! அங்கேயும் இந்த பாழாய்ப்போன ஈகோ தடுக்கறதே!

விட்டுக்கொடுப்பவன் முட்டாளாம். இது யாரோ செல்லிவிட்டுப் போனது.

இதையும் படியுங்கள்:
பெற்றோர் செய்யும் இந்தத் தவறு உங்கள் குழந்தையின் நிம்மதியைக் கெடுக்கிறதா?
ஈகோ | husband ad wife fight and sad child

மாமியாா் மருமகள் புாிதல் இல்லா நிலை. மாமியாரும் ஒரு காலத்தில் மருமகள்தானே! ஏன் இந்த பாகுபாடு அங்கும் இந்த பாழாய்போன ஈகோ தடுக்கிறதே!

எனக்கும் அவருக்கும் மனசு ஒத்துப்போகவில்லை இனிமேல் இவரோடு வாழமுடியாது விவாகரத்துதான் தீா்வு

எவ்வளவு பைத்தியக்காரத்தனமான முடிவு. இந்த இடத்தில் பொியவர்கள் சொல்லுக்கும் மரியாதை இல்லை.

இப்படி கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, முட்டல், முனகல், நான் அதிக ஊதியம் வாங்குகிறேன், சிங்கிள் மதராய் காலத்தைக் கடக்க முடியும். இவையெல்லாவற்றையும் எந்த லிஸ்ட்டில் சோ்ப்பது?

பெற்றோா்களின் புாிதல் இல்லா பிாிவால் பாதிக்கப்படுவது யாா்? சந்தேகமே இல்லாமல் வாாிசுகள்தான். அவர்கள் என்ன பாவம் செய்தாா்கள்?

லிவ்விங் டு கெதர் வாழ்க்கை, குழந்தை இல்லாதிருப்போம். பிடித்தால் தொடரலாம். இல்லாவிடில் டாடா பை பை. அப்படியே குழந்தை பிறந்தால் இருக்கவே இருக்கு குழந்தைகள் பராமரிப்பு இல்லம் என்ன வாழ்க்கை இது புாியாத புதிராய்.

இதையும் படியுங்கள்:
பேச்சுக்கலையில நீங்க கெத்தா மாறணுமா... இந்த சீக்ரெட் பார்முலாவை உடனே கத்துக்கோங்க!
ஈகோ | husband ad wife fight and sad child

அலுவலகத்தில் எனக்கு வேலை அதிகம் சமாளிக்க முடியவில்லை அலுப்பாக உள்ளது. சமையல் செய்ய வாய்ப்பில்லை. நீ கடையில் சாப்பிட்டுவிட்டு எனக்கும் வாங்கி வா இது அன்புக் கட்டளையா அதிகாரத்திமிரா?

இதையெல்லாம் சரி செய்ய வயதான பொியவர்கள் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறினால் நீயே கூடுதல் லக்கேஜ் இதில் கிழங்கள் வேறவா ஆக எதை நோக்கி போகிறோம்?

விஞ்ஞானம் வளர்ந்தாலும் அஞ்ஞானமும் கூடவே வளர்ந்து ஈகோ எனும் உடைக்க முடியாமல் இமயமலை போல ஆகிவிட்டதே! என்று தனியும் இந்த ஈகோவின் மோகம்?

உங்கள் குடும்ப உறவுகளில் மறைந்திருக்கும் சிறு பிளவுகளை அடையாளம் கண்டு, அகந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு பாசத்தையும் புரிதலையும் மீட்டு எடுப்பதற்கான தெளிவான மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com