

பிரச்னைகள் வந்தால் சமாளிக்கத் தெரிந்தவர்கள் இப்போது அதிகம். இதனால்தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சி அதிகமாகிறது. குடும்பங்களில் கூட பிரச்னைகளை சமாளிப்பவர்கள் முன்னேறுகிறார்கள். மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.
பொதுவாக எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் 'என்னால் சமாளிக்க முடியும்' என்று சொல்பவர்கள் உண்மையில் நல்ல முடிவுகளை எடுக்கத் தெரிந்தவர்கள். (Motivational articles) இந்த நல்ல முடிவுகளே சில நேரங்களில் நமக்கு எதிரியாக அமைந்துவிடுகின்றன.
நல்லவைகளை கண்டுவிட்டால், அத்துடன் நின்று விடக்கூடாது. மிகச் சிறந்தது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கு வேகமாக வழி வகுக்கும்.
பொதுவாகவே நாம் எந்த விஷயத்திலும் ஒரே வழிகளைக் கடைப்பிடிக்கிறோம். பெரியோர்கள் செய்து வந்த முடிவுகள், நாமும் அதே வழியில் போகலாம் என்று நினைத்து விடுகிறோம் இது பாதுகாப்பானதாக இருக்கலாம் ஆனால் போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் மாற்று வழிகள் தேவைப்படுகின்றன.
பழைய முறைகளில், தீயவைகளை களைந்துவிட்டு, நல்லவைகளை மட்டும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஒரே வழி. தீயவைகளை அகற்றியதும், பிரச்னை தீர்ந்துவிட்டதாக நினைத்து விடுகிறோம்.
ஒருவருக்கு தலைவலி வருகிறது. உடனே என்ன செய்கிறார்? தலைவலியைப் போக்க மாத்திரையை போட்டுக் கொள்கிறார். ஆஸ்பிரின். உடனே தலைவலி போய் விடுகிறது. காரணத்தைக் கண்டுபிடித்து மாத்திரை சாப்பிட்டதும், தலைவலி போய் விடும். சில வேளைகளில் தலைவலிக்கு உடலில் உள்ள ஏதாவது ஒரு காரணமாக இருக்கலாம். ஆகையால், டாக்டரிடம் சென்று, உண்மை யான காரணத்தை சிகிச்சை பெற்று நீக்கினால்தான் மீண்டும் தலைவலி வராது.
வாழ்க்கையிலும் இப்படித்தான், கெட்டவைகளை நீக்கிவிட்டால் மட்டும் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதாக நினைக்கக் கூடாது. அடிப்படைக் காரணங்களையும் அறிய வேண்டும்.
பொதுவான விஷயங்களில் காரணத்தைக் கண்டுபிடித்து முடிவெடுப்பது சுலபம். ஆனால், சில பிரச்னைகளில் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு சில பிரச்சினைகளில் ஏகப்பட்ட காரணங்கள் காணப்படும். அவை எல்லா வற்றையும் நீக்க முடியாமல் போகக்கூடும்.
சில விஷயங்களில் பிரச்னைக்கு உரிய காரணத்தைக் கண்டுபிடித்தாலும், அதை நீக்க முடியாமல் போகலாம். நீக்க முடியாத சில காரணங்கள் மனிதனின் இயற்கையான சுபாவத்தால் ஏற்படுவது.
இப்படிப்பட்ட நிலைகளில், காரணங்களை எப்படி நீக்க முடியும் என சிந்தித்துப் பார்க்க வேண்டும். அடிக்கடி பல்வேறு கோணங்களில் சிந்தித்துப் பார்த்தால், நிச்சயமாக காரணத்தை நீக்கி விரைவில் முன்னேற்றத்தை அடையலாம்.