பக்குவப்பட்ட மனசு என்பது எது தெரியுமா?

Do you know what a mature mind is?
A mature mind
Published on

ந்த ஒரு செயலை செய்ய ஆரம்பித்தாலும் அதை பக்குவமாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் மூலமும் நிறைவும், நிம்மதியும் அமைதியும் அடைகிறோம் என்பதை உணர்ந்து உற்சாகமாக செயல்படும்போது மனதில் ஒரு நம்பிக்கை பிறக்கும். அப்படி நம்பிக்கை பிறந்து விட்டால் அதுதான் பக்குவப்பட்ட மனது.

மேலும் நண்பர்களும் உறவினர்களும் இதை செய்வார்கள் அதை செய்வார்கள் என அவர்களிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பதை தவிர்த்து விட்டு, நாமாக அவர்களுக்கு உதவிகள் செய்ய தயாராகும் போது  நம்மாலும் எல்லோருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். அந்த தன்னம்பிக்கை தருவதுதான் பக்குவப்பட்ட மனது. 

சிலர் எப்பொழுதும் தான் பெரிய புத்திசாலி என மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சி செய்வார்கள். அல்லது அங்கீகாரம் கொடுங்கள்  என்று  ஒலி மறைவாக கேட்பார்கள். அவர்கள் நமக்கு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை, நன்றாக மதிக்கவில்லை என்று எதிர்பார்த்து உறவினர்களுடனோ சுற்றத்தார்ளுடனோ    கோபமடைவார்கள்.

அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் கைவிடும் பொழுது நாம் அவர்களிடம் என்ன எதிர்பார்த்தோமோ அதை அவர்களுக்கே திருப்பி செய்தால் நம் மனதில்  உள்ள தாழ்வு மனப்பான்மை நீங்கி ஒரு நம்பிக்கை பிறக்கும். அதுதான் பக்குவப்பட்ட மனதிற்கு அடையாளம். 

இதையும் படியுங்கள்:
மனம் மல்லிகையாய் இருக்கட்டும்!
Do you know what a mature mind is?

இப்படி ஒவ்வொன்றையும் தளராத நம்பிக்கையுடன்  செய்து முடிப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அந்தப் பக்குவம் தான் மனசுக்கு வேண்டியது. 

வண்ணங்கள் பூசாத சித்திரம் 

எண்ணங்கள் வெளிப்படாத  ஆசை

தோல்வி தொடாத வெற்றி   

பறித்து தொடுக்கப்படாத பூ

யுத்தத்தை சந்திக்காத தேசம்

உளியை சந்திக்காத சிற்பம்

தீயை சந்திக்காத தங்கம்

பிரசவத்தை சந்திக்காத பெண்மை

முழுமை பெற்றதாக சரித்திரம் இல்லை.

ஆக இவற்றையெல்லாம் சரியான முறையில் செதுக்கி  செப்பனிட இதையெல்லாம் நம்மால் செய்து முடித்து விட முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கையின் துணைகொண்டு அவற்றை எல்லாம் சீராக்கி  செப்பனிட்டால்தான் அவையெல்லாம் பக்குவம் அடையும். அந்த மாதிரியான பக்குவம்தான் மனசுக்கு வேண்டியது. அதைத்தான் பக்குவப்பட்ட மனசு என்பது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com