
ஒரு சிலர் நம்மிடம் தானே வந்து பேசினாலும், மனதில் அவரை வெறுக்கும் எண்ணம் ஏற்படுகிறது. எப்போது அந்த இடத்தை காலி பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. வேறு சிலர் வெகுதொலைவில் இருந்தாலும், அவரிடம் பேசவேண்டும், பழக வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நல்ல எண்ணங்கள் கொண்டவர்களிடம் தெய்வீக காந்த அலைகள் வீசும். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அன்பும், அரவணைப்பும், புகழும் மரியாதையும் வரவேற்பும் கிடைக்கும்.
சில ஞானிகளின் இருப்பிடத்திற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதற்கு காரணமும் அந்த ஞானிகளின் தவ ஆற்றலால், ஒருமுகப்பட்ட சிந்தனையால், தூய எண்ணங்களால் ஆழ்மனத்தைப் பயன்படுத்தும் பக்குவத்தால் மகத்தான ஒரு சக்தியைப் பெற்றிருப்பதே காரணமாகும்.
அந்தச் சக்தியால் அங்கு செல்வோர்கள், மன அமைதி. நோய் நீங்குதல், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுகின்றனர். நமது தமிழ்ச்சித்தர்கள் தரணி போற்ற வாழ்ந்த காரணம் இந்த அளப்பரிய ஆற்றல்களைத் தங்களிடத்தே கொண்டிருந்ததனால்தான்.
அதனால்தான் நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் என்று ஆன்றோர்கள் அனுபவித்துச் சொல்லி வைத்தார்கள்.
'சுரையொன்று போட்டால் விதை ஒன்று முளைக்குமா?' என்ற பழமொழி கூட இதற்காக சொல்லப்படுவதுதான். நல்ல எண்ணமும், நல்ல பேச்சும், நல்ல நண்பர்களின் உறவும் வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும் படிக்கற்களாகும்.
நாம் அடைய விரும்பும் லட்சியங்களை நினைப்போம். இவைகளின் பலனாக நமது மனதில் வலிமையும், திறமையும். இளமையும், மகிழ்ச்சியும் நம் உடலில் மின்னத் தொடங்குவதை நாமே"நான் திறமை மிகுந்தவன். நான் ஆரோக்கியமானவன். நான் மகிழ்ச்சிநிறைந்தவன் போன்ற எண்ணங்களை முழு நம்பிக்கையுடன் எண்ணும்போது நமது கெட்ட எண்ணங்கள் அழிக்கப்பட்டு, புதிய நல்ல எண்ணங்கள் நமது மனதில் குடியேறி குதூகலிக்க வைக்கும்.
நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில், செயல்களில் நாம் வெற்றி பெறுவோம். இடையூறுகள் பல ஏற்பட்ட போதிலும் இறுதியில் நாம் வெற்றியையே அடைவோம் என்ற எண்ணத்தை, நம்முடைய மனத்தில் எல்லையாக நிறுத்தி, வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தோல்வி எண்ணத்தை நாம் விரட்டவேண்டுமேயானால் நம்முடைய மனம். நாம் பெற்ற வெற்றிகளையே எப்போதும் அசைபோட்டுக் கொண்டிருக்கவேண்டும்.
மனவலிமையுள்ளவர்களால் மரணத்தையும் வெல்ல முடியும்' என்று சிலர் கூறுகின்றார்கள் அது உண்மையோ பொய்யோ, மரணத்தை வலிமைமிக்கவர்களால் நீண்டகாலம் தள்ளிப்போட முடியும் என்பது மட்டும் உறுதி' என்கின்றார் எட்வின் சார்லஸ் என்ற மனோதத்துவ அறிஞர்.
மனவலிமை அடைய வேண்டுமானால் மனத்தில் மாசு கலவாமல் பர்த்துக்கொள்ள வேண்டும். அப்பழுக்கற்ற கண்ணாடிபோல மனத்தை வைத்துக் கொண்டிருப்பவர் களால் தான், ஆழ்மனத்தின் ஆற்றல் பெற்று வெற்றிச் செயல்களைச் செய்ய முடியும்.