பதட்டத்தை தவிர்க்க பக்காவான 10 வழிகள்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

தட்டம் நம் வெற்றியை தடுக்கும் ஒரு சக்தி என்று சொல்லலாம். அது நம் மனதில் இருக்கும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உடைத்து எறியும் ஒரு சக்தி. அந்த சக்தியை மட்டும் நமக்குள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. பதட்டத்தை தவிர்க்க…

1- அமைதியான சூழலில் அமருங்கள். மூச்சை ஆழமாக இழுத்துவிடுங்கள். மார்பை விரிக்காமல், வயிறு முழுக்க காற்று நிரம்புவது போல வேகமாக மூச்சை இழுத்து விடுங்கள். 'இதில் மார்க் குறைந்துவிடுமோ'. 'இன்டர்வியூவில் நமக்குத் தெரியாத கேள்வியைக் கேட்பார்களோ' என்பது போன்ற நினைப்புகளைத் தூக்கிப் போட்டுவிட்டு. உங்கள் நாசி வழியே சென்று திரும்பும் மூச்சில் மட்டுமே கவனம் வையுங்கள். மனமும் உடலும் அமைதி அடையும். நடக்காத எதிர்காலம் பற்றிய கவலைகள் போய், நிகழ்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் யோசிக்கலாம்.

2- இப்படிப்பட்ட தருணங்களை பசியோடு எதிர்கொள்ளாதீர்கள். ஒருவேளை கிளம்பும்போது பசிக்கவில்லை என்றாலும், அங்கு சென்று காத்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டு ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லுங்கள். பசியில் இருக்கும்போது மனம் ஒருவித எரிச்சலில் எதிர்மறையான விஷயங்களையே யோசிக்கும்; அதனால் குழப்பம் ஏற்படும். அதுவே பதற்றமாக வெளிப்படும்.

3- நடக்கப்போகும் அந்த நிகழ்வு பற்றிய எண்ணமே உங்களுக்குப் பதற்றம் தருகிறதா? அமைதியாக அதைவிட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். பிடித்த டி.வி. சேனல் பார்க்கலாம்; விரும்பிய புத்தகம் படிக்கலாம்; நண்பர்களோடு அரட்டை அடித்து மன நிறைவு பெறலாம். நடக்கப்போகும் விஷயம் முழுமையாக நம் கட்டுப்பாட்டில் இல்லை எனும்போது, அதை நினைத்து பதற்றப்படுவதால் மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது?

4- ஆனால் அந்த முக்கியமான நிகழ்வுக்கு எந்தத் தயாரிப்பும் செய்யாமல் இப்படி பொழுது போக்கில் மூழ்காதீர்கள். தேர்வு, இன்டர்வியூ, சந்திப்பு என எதுவாக இருந்தாலும், அதற்கு முழுமையாக உங்களைத் தயாராக்கிக் கொள்ளுங்கள்.

5- கேள்விகள் கேட்காமல் எதுவுமே மாறாது. உங்கள் பதற்றத்தை நீங்கள் கேள்விகளால் எதிர்கொள்ளுங்கள். கடந்த காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படி எதிர் கொண்டீர்கள் என யோசித்துப் பாருங்கள். இப்படித்தான் நீங்கள் அப்போதும் பயந்தீர்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்தை பூதாகரமாக்கி வருத்தப்பட்டீர்கள். ஆனால் எல்லாமே சுபமாக முடிந்து, 'இதற்கா இப்படி பயந்தோம்' என நீங்கள் வெட்கப்படும்படி ஆகிவிட்டது. இப்போதும் அப்படி நல்லதே விளையும் என பாசிட்டிவாக நினையுங்கள்."

6- அலை வேகமாக வரும்போது கரையில் அமைதியாக நீங்கள் நின்றிருந்தால், உங்கள் கால்களுக்கு அடியில் இருக்கும் மணலை அந்த அலை பறித்துக்கொண்டு போய்விடும். நீங்கள் அலைகளை எதிர்கொண்டு நடந்தால் இப்படி ஆகாது. பதற்றம் என்ற வெள்ளத்தில் மூழ்கி விடாதீர்கள். அப்புறம் அதிலிருந்து மீண்டு வர முடியாது.

7- நெருப்பு சுடும்' என பாடம் படித்த குழந்தையைவிட, தொட்டுப் பார்த்து உணர்ந்த குழந்தை இன்னும் எச்சரிக்கையாக இருக்கும். பிரச்னையைக் கண்டு ஒதுங்கினால், அது உங்கள் மனதைத் துரத்திக்கொண்டே இருக்கும். எதிர்கொள்ளுங்கள். பிரச்னையை நினைத்து பயப்படுவதைவிட, அதை எதிர்கொண்டு போராடுவது ஒன்றும் கஷ்டமான விஷயமில்லை!

இதையும் படியுங்கள்:
அக்னி நட்சத்திர வெயிலுக்கு இயற்கையான சில அழகு டிப்ஸ்கள்!
Motivation image

8- ஒரு பைக்குள் ஏதாவது ஒரு பொருள் இருக்கும் போதுதான் எடை கூடுகிறது. உங்கள் மனதில் பிரச்னையை ஏற்றி வைத்தால், மன அழுத்தம் அதிகரிக்கிறது. அதை எப்படியாவது துரத்தும் வழியைத் தேடுங்கள். இதை எப்படி எதிர்கொள்வது என நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். இதேபோன்ற சூழலை எதிர்கொண்டவர்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு உதவும்.

9- அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அதுதான் இந்த வாழ்வை சுவாரசியம் ஆக்குகிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களை இழந்து விடாதீர்கள். இந்தக் கணத்தில் வாழுங்கள். உங்கள் சூழலில் இருக்கும் சுவாரசியங்களை உற்றுப் பாருங்கள். ஒரு குழந்தையின் சிரிப்பு, ஒரு அழகிய ஓவியம், ஒரு வண்ணமயமான மலர்...இவை தரும் ரசனைகளால் மன மகிழ்ச்சி பெறுங்கள்.

10- இவ்வளவு முன்னேற்பாடுகள் செய்த பிறகும் எதிர்பாராத விளைவு நேர்கிறது. அதற்காக வருந்துவதில் அர்த்தமில்லை. எவ்வளவு மோசமான விஷயம் நடந்தாலும், அந்த நிமிடத்தோடு உலகம் முடிந்துவிடப் போவதில்லை. நாளை என்கிற தினம், இன்னும் ஏராளமான வாய்ப்புகளை உங்களுக்குக் கொண்டுவரப் போகிறது; அவற்றின் கூடவே சில பிரச்னைகளும் வரலாம். இன்றே இவ்வளவு பதற்றப்பட்டால், நாளை என்ன செய்வது? கொஞ்சம் மிச்சம் வையுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com