எல்லாவற்றையும் பெற்றுத் தரும் கருவி ஒப்புக் கொள்ளுதல்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com

சின்ன தவறுதானே என்ன ஆகிவிடப் போகிறது. யாருக்கு தெரியப் போகிறது என்று நாம் முதலில் சொல்ல ஆரம்பிக்கும் பொய் அதுவே தொடராக மாறிவிடும். சின்னத் தவறு செய்தாலும் அதை ஒப்புக்கொள்வது என்பது மிகப்பெரிய நல்ல விஷயம். அது உங்களின் இமேஜையும் உயர்த்தும்.

பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப்பெரிய தப்புதானே. சில சூழ்நிலைகளில் நாம் சில பொய்களை நம்பி ஏமாந்து விடுவோம். ஆனால் அது பொய் என்று தெரிந்தும் கூறிய வரை நாம் கேட்காமல் அவர் மீது நமக்கு இருக்கும் மரியாதையை நாமே குறைத்துக் கொள்கிறோம். இதுதான் எல்லோரின் வாழ்க்கையிலும் நடக்கும் ஒரு சம்பவம்.

அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு..? ஆனால் நாம் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து கொண்டே இருக்கின்றோம். இப்படித்தான் போரசையில் பல பொய்களை உண்மை என்று நம்பி ஏமாந்து கொண்டு இருக்கின்றோம், ப‌ண‌த்தையும் இழ‌ந்து கொண்டு வருகின்றோம்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனின் அப்பா ஆசையாக ஒரு செர்ரி மரத்தை வளர்த்து வந்தாராம்.

ஒருநாள் வாஷிங்டனுக்குப் புதிய கோடாலி ஒன்று கிடைக்க, அதைக் கொண்டு கண்ணில் படுகிற மரம், செடிகளை எல்லாம் வெட்டி எறிந்து இருக்கிறார்.

அவர் வெட்டித் தள்ளியதில் அப்பா வளர்த்த செர்ரி மரமும் ஒன்று. வெட்டப்பட்ட மரத்தைப் பார்த்து வாஷிங்டனின் அப்பாவுக்கு அதிர்ச்சி. மரத்தை யார் வெட்டியது என அவர்  எல்லோரிடமும் கேட்க, வாஷிங்டன், தனது தவறை தைரியமாக ஒப்புக் கொண்டாராம். 

உண்மை தெரிந்து கோபத்தில் ஏதேனும் செய்து விடுவாரோ என எல்லோரும் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள். வாஷிங்டனின் அப்பாவோ, அமைதியாகி இருந்தார். மகனை அழைத்து, ‘நான் கோபக்காரன்னு தெரிஞ்சும், நீ உண்மையைச் சொன்னே பார்த்தியா அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சது. 

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள மிக பிரபலமான காபி வகைகள் பற்றி பார்க்கலாம் வாங்க!
Motivation image

செர்ரி மரம் வெட்டப்படாம இருந்து இருந்தா எனக்குக் கிடைத்து இருக்கிற மகிழ்ச்சியை விட, நீ உண்மை பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி...” என்று மகனின் நேர்மையைப் பாராட்டினாராம். 

வாஷிங்டனின் மனதில் இது ஆழமாகப் பதிந்துப் போனது.  அதன்பிறகு, தன் வாழ்நாளில் எந்தச் சூழலிலும் எத்தனைப் பெரிய செயலுக்கும் பொய் சொல்வதில்லை என்கிற தன் கொள்கையில் உறுதியாக இருந்திருக்கிறார். பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; 

தவறு என்று தெரிந்தால், ஆமாம் நான் தவறு செய்து விட்டேன் என்று ஒரு வரி சொல்லி விடுங்கள். இதுவே உங்களுக்கு எல்லாவற்றையும் பெற்றுத்தரும் ஒரு மிகப்பெரிய கருவி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com