ஆணவத்தால் முடியாததை அமைதியால் சாதிக்கலாம்! வாழ்க்கையை மாற்றும் ரகசிய விதிமுறைகள்!

 rules for mental peace
rules for mental peaceImg credit: AI Image
Published on

சிலர் இருந்த இடத்திலேயே இருந்து அமைதியாக அனைத்தையும் கையாண்டு வெற்றி சூடுவது உண்டு. அப்படி உங்கள் மன அமைதியையும், உங்கள் எதிர்காலத்தையையும் பாதுகாக்கப் போகிற விதிமுறைகள் என்னவென்று பார்ப்போம்.

உங்கள் பெருமையை விட மன அமைதி தான் முக்கியம். ஆணவத்தால் ஜெயிக்க முடியாததைக் கூட அமைதியாக இருந்து ஜெயிச்சுடலாம். அதற்கு உங்கள் விவாதத்தை, எதிர்மறையான பேச்சுகளை, எதிலும் குற்றம் கண்டுபிடிப்பதை நிறுத்துவது அவசியம்.

உங்களுடைய ஆரோக்கியத்தை தினமும் நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நடக்காதவன் கால்களில் சிலந்தி கூட கூடு கட்டும் என்பது பொன்மொழி. ஆதலால், நடைப்பயிற்சியை தினசரி மேற்கொள்ளுங்கள். மருந்து மாத்திரையால் சரி பண்ண முடியாத பல விஷயங்களை உங்கள் ஒழுக்கமான இது போன்ற பழக்க வழக்கங்கள் தடுத்திடும்.

சிறிது நேரம் புன்முறுவலுடன், உற்சாகம் தரும் வார்த்தைகளை பேசுபவர்களுடன் பழகும் போது அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்வதைக் காணலாம். ஆதலால், இது போன்று உங்களுக்கு நிம்மதி தருகிறவர்கள் கூட உங்கள் நேரத்தை செலவிடுங்கள். பிரச்னையைக் கொண்டு வருகிறவர்கள் கூட இல்லை. இதனால் உங்கள் நட்பு வட்டம் சின்னதாகலாம். ஆனால், உங்கள் மன அமைதி அதிகமாகும்.

சில கசப்பான விஷயங்களை மன்னித்து விடுங்கள். ஆனால், அதற்கான பாடத்தை மறக்காதீர்கள். மன்னிப்பு என்பது அவர்களுக்காக அல்ல உங்களுக்காக. அது உங்களை சுதந்திரமா உணர வைக்கும். மன்னித்து விட்ட மனநிலை நிம்மதியான தூக்கத்தை வரவழைக்கும்.

இதையும் படியுங்கள்:
யார் என்ன நினைப்பார்கள்? இளைஞர்களின் கனவுகளை முடக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறை!
 rules for mental peace

கடனைத் தவிர்த்து விடுங்கள். கடன் வாங்கி அளவுக்கு மேல் பர்னிச்சர் வாங்குவதையோ தேவையற்ற ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதையோ தவிர்த்து விடுங்கள். குறிப்பிட்ட வயதுக்கு மேல் உண்மையான சுதந்திரம் என்பது உங்கள் அமைதியில் தான் இருக்கிறது. எளிமையான வாழ்க்கையில் தான் இருக்கிறது. ஆடம்பரத்தில் இல்லை.

சாதாரண நாட்களுக்கு நன்றி சொல்லுங்கள். அன்றைய தினசரி வேலைகளை திறம்பட செய்து முடித்து அந்தந்த நாட்களை அமைதியாக கடந்து விடுவதற்காக எல்லா நாளும் நன்றி சொல்ல வேண்டும். மன அமைதி நிறைய கிடைப்பதில் மாத்திரம் இல்லை. போதும் என்கிற உங்கள் மனசுல தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com