
தற்போது உள்ள இளைய சமுதாயத்திற்கு எந்த ஒரு செயலை செய்ய தொடங்கினாலும் அதில் ஒரு தயக்கம் இருக்கிறது. தயக்கத்தின் காரணமாக அந்த செயலை பிறகு செய்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு விடுகிறார்கள். இதை தான் procrastination என்று சொல்கிறோம்.
நமக்கு சில நேரங்களில் சில விஷங்கள் செய்யவே தோன்றாது. நாளைக்கு செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டிருப்போம். போக போக அந்த விஷயம் செய்வதற்கு ஈஸியாக மாறிவிடும் என்ற நினைப்பு நமக்கு உண்டு. ஆனால், அப்படி எதுவுமே கிடையாது.
Cold water doesn't get warmer, if you wait to jump என்று சொல்வார்கள். இப்போது உங்கள் நண்பகளுடன் நீச்சல் குளத்திற்கு செல்கிறீர்கள். தண்ணீர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால், தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது.
உங்களுக்கோ குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு பயம். உங்கள் நண்பர்கள் தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீங்களோ வெளியிலேயே நின்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் காத்துக் கொண்டிருப்பதால், தண்ணீர் சூடாகுமா என்ன? இன்னும் தண்ணீர் குளிர்ச்சியாக தான் செய்யும், சூழ்நிலைகள் மோசமாக தான் செய்யும்.
ஒரு விஷயத்தை ஆரம்பிக்காமல் நாம் தள்ளிப் போட்டுக்கொண்டே போவதால் எதுவுமே மாறப்போவதில்லை. ஏதாவது முயற்சி செய்துவிட்டு காத்திருந்தால் பரவாயில்லை.
ஆனால், எதுவுமே செய்யாமல் காத்திருப்பதில் எந்த பயனுமில்லை. ஒவ்வொரு முறை ஏதேனும் வேலையை தள்ளிப்போடுவதின் மூலமாக நம்முடைய மூளைக்கு அது ஒரு கடினமான வேலை என்பதை பதிவு செய்துக் கொண்டிருக்கிறோம். கடைசியில் இதை நம்மால் செய்ய முடியாது என்று விட்டுவிடுவோம்.
தண்ணீர் எவ்வளவு குளிச்சியாக இருந்தாலும் குதித்து விடுங்கள். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், போக போக அந்த குளிர்ச்சியை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும். எந்த தண்ணீரில் இறங்க பயந்தீர்களோ, குளிர்ச்சியாக இருக்குமோ என்று தயங்கினீர்களோ, அந்த தண்ணீரில் இறங்கியதும், 'பரவாயில்லையே இதற்காகவா இவ்வளவு பயந்தோம்?' என்று தோன்றும்.
நாம் செய்ய தயங்கும் செயல்களுக்கும் இது பொருந்தும்.
இக்கருத்தை நாலடியாரில் அப்போதே எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார்கள் பாருங்களேன்.... 'ஒன்றே செய், நன்றே செய் அதுவும் இன்றே செய்' என்று சொல்கிறது.
ஒரு செயலை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயலாற்ற வேண்டும். அதுவும் தள்ளிப்போடாமல் இன்றைக்கே இப்போதே செய்யத் தொடங்க வேண்டும்.