வாங்க பேசிப் பழகுவோம் 8 வழிகளில்…!

Speech should not hurt anyone
motivational articleImage credit - pixabay
Published on

நாம் வாய் தவறிப் பேசும் வார்த்தைகளை திரும்ப அள்ள முடியாது. அதே மாதிரி நாம் பேசும் பேச்சு யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது யாரிடம் எப்படிப் பேசுகிறோம் என்பது நம் வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் முக்கியம்.

உங்களை விட வயதில் மூத்தவர்களிடம்;

அவர்களுக்கு அனுபவ அறிவு இருக்கிறது என்பதை அறிந்து அதை மதித்துப் பேசவேண்டும். உங்களுக்கு இதெல்லாம் புரியாது, உங்களுக்கு ஒண்ணும் தெரியாது' உங்களை யார் கேட்டது, 'உங்கவேலையைப் பாருங்க' போன்ற வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தும். இதனை தவிருங்கள்.

நெருங்கிய உறவுகளிடம்;

வீடு என்றாலே பிரச்னைகள் இல்லாமல் இருக்காது. நாம் அவசரமாக பேசும் வார்த்தைகளை கோபத்தில் கொட்டக் கூடாது. 'நான் ஒரேயடியாய் போன பின்தான் இந்த வீடு உருப்படும், எங்காவது ஒழிஞ்சு போ , போன்ற அபசகுனமான வார்த்தைகளை உறவுகளிடம் பேசவும், கேட்கக்கூடாது. இதனை தவிருங்கள்.

பிள்ளைகளிடம்;

குழந்தைகளிடம்பேசத் தெரியாமல், முன் பின் யோசிக்காமல் பேசுபவர்கள் நிறையப் பேர் உண்டு. டேய், இங்க நாங்க பேசியதை யாரிடமும் சொல்லாதே, நாம் இங்கு வந்ததை உன் தாத்தா, பாட்டிகிட்டே சொல்லாதே, போன்ற வற்றை குழந்தைகளிடம் பேசாதீர்கள். இதனை தவிருங்கள்.

புகுந்த வீட்டு உறவுகளிடம்;

சிலர் திருமணமாகி புகுந்த வீடு வந்ததும் தன் பிறந்த வீட்டுக் கதை அங்குள்ளவற்றை ஒன்று விடாமல் ஏற்றி கூறுவார்கள். பின்னாளில் ஏதாவது ஒரு பிரச்னை வரும்போது அதனை சுட்டிக்காட்டி சண்டை வரும். இது தேவையல்லாத ஒன்று. அதனால் பேச்சு அளவாக இருக்கட்டும்.

புதிதாக அறிமுகமாகும் உறவினர், நண்பர்களிடம்;

முதன் முதலில் அறிமுகமாகும் நண்பர்கள், உறவினர்களிடம் அளந்து பார்த்து பேசுவதே நல்லது. இன்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க மாட்டோமா ' என்று ஏங்கும்படி இருக்க வேண்டும். 'சே, இனிமே இவங்க கிட்டே வந்து மாட்டிக்கக் கூடாது' என்று ஒதுங்கும்படி இருக்கக் கூடாது. இதனை பார்த்து தவிருங்கள்.

வீட்டில் வேலை செய்பவர்களிடம்;

அவர்களை அலட்சியமாக நடத்தவும் கூடாது. பேசவும் கூடாது. தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் கூடாது. இரண்டுமே மோசமான விளைவுகளைத் தரும். அவர்கள் எதிரில் குடும்ப ரகசியங்கள் பேசுவதோ அக்கம் பக்கம் வீட்டாரை பற்றி பேசவோ கூடாது. இதனை தவிர்த்திடுங்கள்.

இதையும் படியுங்கள்:
செயல்பாடுகளே வெற்றியின் விதைகள்!
Speech should not hurt anyone

சக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள்;

அலுவலகத்தில் நெருக்கமான ஒரிரு நண்பர்கள் தவிர மற்றவர்களிடம் அளவாக அளந்து பேசிப் பழகுங்கள். யார் யார் எப்படி என்று சொல்ல முடியாது. உங்களின் அதிகப்படியான பேச்சு உங்களின் வேலைக்கு உலை வைத்து விடலாம். வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளரிடமும் அன்பும் கனிவும், ஆதரவாக பேசுங்கள்.

அலுவலக மேலதிகாரிகளிடம்;

எந்த ஒரு அதிகாரியும் தனக்கு கீழே வேலை பார்க்கும் ஊழியர்கள் உழைப்பாளியாகவும், தான் சொல்வதைக் கேட்பவர்களாக இருப்பதை விரும்புவார்கள். அவரிடம் எனக்கு அது தெரியும், இதை இப்படி செய்யலாமே? என வேண்டாத வீண் வார்த்தைகளை பேசுவதை தவிருங்கள்.

இது மாதிரி 8 முன் மாதிரியானவர்களிடம் பேச்சுக்களை தவிர்த்தும். மற்றவர்களிடம் பேசுவதை குறைத்தால் வாழ்க்கையில் வெற்றிதான்.

அளவோடு நிதானமாக பேசி பழகுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com