மனிதன் நினைப்பது ஒன்று.
அதற்கு பதிலாக தெய்வம் நினைப்பதும் ஒன்று.
பணம் ஒன்றுதான் குறிக்கோள் என்ற நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டு விட்டாா்கள்.
பணம் இல்லாமல் ஒரு துளியும் அசையாது என்ற அளவிற்கு மனித மனங்களில் விசாலம் குறைந்து விகல்பம் அதிகரித்துவிட்டது.
அதற்கேற்ப கால சூழ்நிலையும் மாறிவருகிறது.
இயந்திரகதி உலகம் யாருக்கும் யாரும் பயப்படவேண்டியதில்லை.
பொியவர் சிறியவர் மட்டு மரியாதை எல்லாம் கைமீறி போய்விட்டது.
இனி இப்படித்தான் எதுவும் செய்வதற்கில்லை என்ற மனப்பான்மையோடுவாழ கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அனுசரித்துதான் போகவேண்டும்.
அதிலும் வயோதிகம் வந்து விட்டால் நமது சொல்லுக்கு மதிப்பே கிடையாது.
நிறையவும் பேசினால் நாம் நடத்தப்படும் விதமே வேறுதான்.
கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் அதற்கு மூலாதாரமே வரும் பெண்களால்தான்.
புகுந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கு அவரது தாய் வீட்டின் பாசம் குறைவதே இல்லை.
எப்போதும் அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, சகோதரிகள், மாமா, மாமி, இவர்கள் புராணம் தான்.
அதை கணவன் அல்லது மாமியாா் தட்டிக்கேட்டால் மாமியாா் வில்லி, அரக்கி பட்டம் சுமக்கவேண்டும். இவர்களோடு நம்மால் கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் அடிமையாய் வாழமுடியாது.
இஷ்டமிருந்தால் வாழலாம், தனி ஜாகை போகலாம்.
நமது வாழ்க்கையை செட்டில் செய்து கொள்ளலாம்.
தனி ஜாகை வர முடியாது என கணவன் சொன்னால் பூகம்பம்தான், பிரளயம்தான்.
'சரி நான் என் அம்மா வீட்டோடு வாழ்கிறேன் முடிவு உங்கள் கையில்தான்' எனக்கூறி தாலியைக் கழட்டிவைத்து விட்டுப் போகவா என கேட்பவர்களும் அதிகம்.
அந்த அளவுக்கு பலரது வாழ்க்கைச்சக்கரம் உருண்டு ஓடுகிறது.
ஆக நாம்தான் இந்த உலகத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். நமது உடலில் ஆரோக்கியம் இருந்தால் தான் நல்ல விதமாக வாழலாம்.
அதைவிடுத்து ஆரோக்கியம் குறைந்து தெம்பு தைாியம் குறைந்து விட்டால் நம்மைவிட்டு உறவுகள் விலகிவிட வாய்ப்புகளே அதிகம்.
அதை புாிந்து கொள்ள நமக்கு பக்குவம் இருந்தாலும் நமக்குள்ள மரியாதை குறையத்தான் செய்யும்.
ஆக பணம் தான் இந்த உலகில் அன்பு, பாசத்தை நிா்ணயம் செய்கிறது.
எவ்வளவு பொிய காாில் தனி விமானத்தில் யாா் பறந்தாலும் கடைசியில் போவது மூங்கில் கழிகளோடும், பச்சை மட்டை கீற்றுகளோடும் தான். பயணம் என்ற நிலை எனத் தொிந்தாலும் வாழ்கின்ற நாட்களில் ஆணவம் ஏன்?
அது பொிய அபாயமான ஒன்றுதான். இந்நிலையில் நாம் நமக்காக வாழ்வதே சிறந்தது.
பொதுவாகவே யாா் கையையும் எதிா்பாராமல் நமது வேலைகளை நாமே செய்துகொள்ள வேண்டும்.
முடியாத நிலையில் மனைவியுடன் நல்ல ஒரு ஆதரவு இல்லம் நாடி செல்லவேண்டியதே நமக்கு மேலும் ஆரோக்கியம் தரக்கூடும்.
காலியான வயிறும், காலியான மனதும், வஞ்சக எண்ணங்களும், மனசாட்சி இல்லா உறவுகளும், கற்றுத்தரும் பாடத்தை எந்த பல்கலைக்கழகத்தாலும் கூட கற்றுத் தர இயலாது.
ஆக இளமைப்பருவத்தில் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வுக்கு தேவையானதை யாா் கையையும் எதிா்பாராமல் வாழுங்கள்.
கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் என்ற நிலைபாடுகளோடு வாழ்வதே சிறப்பாகும். நம் வாழ்க்கையே நம்கையில்தான்!