ஒரு நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள் குறித்து சாணக்கிய நீதி சொல்வது என்ன?

Chanakkiya, Good wife
Chanakkiya, Good wife
Published on

‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டிய புனிதமான பிணைப்பு’ என்கிறது சாணக்கியர் கூற்று. ஒரு நல்ல மனைவியின் இலக்கணங்களாக சாணக்கியர் கூறும் 5 குணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நல்ல மனைவியிடம் இருக்க வேண்டிய 5 குணங்கள்:

திருமண வாழ்வில் கணவன், மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் பாசத்தையும் நேசத்தையும் பரிமாறிக்கொள்வதுடன் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதையும் வலியுறுத்துகிறார் சாணக்கியர். ஒரு கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் அதேவேளையில், மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர் சொல்கிறார்.

1. பொறுமை: கணவன், மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள், தவறான புரிதல், கருத்து வேறுபாடுகள் இருக்கும். ஒரு மனைவி பொறுமையாக இருந்து உறவின் நல்லிணக்கத்தை பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும். கணவர் கோபப்பட்டு பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை ஆக்குவதற்கு பதிலாக அமைதியாகவும் நிதானமாகவும் சூழ்நிலைகளை கனிவுடன் கையாள வேண்டும் என்கிறது சாணக்கிய நீதி.

இதையும் படியுங்கள்:
நிறைவான வாழ்க்கையின் சீக்ரெட் ஆஃப் எனர்ஜி!
Chanakkiya, Good wife

2. புத்திசாலித்தனம்: புத்திசாலியான மனைவி வீட்டை திறம்பட நிர்வாகிப்பதிலும் முக்கியமான முடிவுகளை எடுப்பதிலும், தேவைப்படும்போது கணவனுக்கும் குடும்பத்திற்கும் வழிகாட்டவும் செய்வாள். உறவுகளை வளர்ப்பதிலும் கணவனுக்கு தேவைப்படும்போது ஆலோசனை வழங்கவும் புத்திசாலியான மனைவி முயற்சி செய்வாள். துன்பமான காலங்களில் சரியான நடவடிக்கையை அவள் எடுக்கும்போது குடும்பம் முன்னேற்றம் அடையும்.

3. நம்பிக்கை: ஒரு நல்ல மனைவி, தனது கணவனுக்கு நம்பிக்கையான மனைவியாக இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால்தான் கணவனும் மனைவியும் தங்கள் ஆழ்ந்த எண்ணங்கள், கனவுகள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடியும். தனது கணவனை நம்புவதுடன் அவர் தன்னை நம்புமாறு அவள் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். பரஸ்பரம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைக்கும் நம்பிக்கை குடும்பம் என்ற தேருக்கு அச்சாணியாக விளங்கும்.

இதையும் படியுங்கள்:
முதியோர்களின் மூளை ஆற்றலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் 5 தினசரி பழக்க வழக்கங்கள்!
Chanakkiya, Good wife

4. புரிதல் மற்றும் இரக்கம்: தனது கணவரின் தேவைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் ஒரு பெண், இரக்கத்தையும் ஆதரவையும் வழங்குகிறாள். அதனால் கணவன், மனைவி உறவு வலுப்படும். கணவனது சோதனையான காலக்கட்டங்களில் அவரது உணர்ச்சிகளை புரிந்துகொண்டால்தான் அவள் அவருக்கு ஆதரவாக இருக்க முடியும் என்கிறார் சாணக்கியர். இந்த உணர்ச்சிபூர்வமான நெருக்கம் அவர்களிடையே நல்ல ஆழமான பாசத்தையும் நேசத்தையும் வளர்க்கும்.

5. தன்னம்பிக்கை: ஒரு பெண்ணின் முக்கியமான அடையாளம் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை உள்ள ஒரு மனைவிதான், தனது கணவருக்கு எந்த நிலையிலும் ஆதரவாக இருக்க முடியும். கணவனுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவைத் தரும் அதேவேளையில், அவள் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். தனது ஒரு நல்ல மனைவி தனது சொந்தக் காலில் நிற்கவும், தனது இலக்குகளை தொடரவும், குடும்பத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கவும் அவளது தன்னம்பிக்கை உதவுகிறது. இதனால் அவள் வீட்டிலும் வெளியிலும் தனது வாழ்க்கையை நிர்வகிக்கும் நம்பிக்கையையும் திறனையும் மேம்படுத்துவாள்.

இந்த 5 குணங்களும் ஒரு நல்ல மனைவியின் அடையாளங்கள் என்கிறது சாணக்கிய நீதி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com