பணம்தான் வாழ்க்கையா?

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

சிலர் எந்த நேரமும் பணம் பணம் பணம் இதைத் தவிர வேறு எதைப் பற்றியும் யோசிப்பதில்லை. எப்படி பணம் சம்பாதிப்பது. எப்படி அதை பாதுகாப்பது. அது எந்தெந்த வழியில் பெருக்குவது என்று சிந்தனையோடு மட்டுமே செயல்படுவார்கள். இப்படி செயல்படுபவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்றுதான் அர்த்தம் செல்வம் இருக்கும் மீதி அனைத்தும் சென்றுவிடும்.

தேவைக்கு அதிகமாக பணம் சேர்த்தது சிலரின் பொழுது போக்காகவே உள்ளது. இதில் பெருமையாக வேற சொல்லிக் கொள்வார்கள். நான் 20 தலைமுறைக்கு சொத்து வைத்திருக்கிறேன் என்று. பணம் என்பது வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமானது அதை மறுக்க முடியாது ஆனால் அதன் பின்னாலேயே ஓடுவது என்பது மிகப்பெரிய தவறான செயலாம்.

வாழ்வதற்குப் பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக்கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வார். “பண ஆசை எல்லாவிதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக்கொண்டு இருக்கிறார்கள்”.

இருப்பதை வைத்து திருப்தியோடு வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணப்பற்றாக்குறை இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள். உதாரணத்துக்கு, அவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதைப்பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

பணப் பிரச்சினையினால்தான் நிறையப் பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பணப் பிரச்சினையால் சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். சிலருக்குத் தங்கள் துணையை விட, ஏன் தங்கள் உயிரை விட பணம்தான் முக்கியமாக இருக்கிறது.

ஆனால், பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் அதையே முழுமையாக நம்பி இருக்க மாட்டார்கள். ஒருவனுக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் அது அவனுக்கு நிம்மதியான வாழ்வைத் தராது.

இதையும் படியுங்கள்:
பணக்காரர்களின் 9 விதமான வெற்றி ரகசியங்கள் தெரியுமா?
Motivation image

பணத்தையும், சொத்து சுகத்தையும் பெரிதாக நினைக்கிற ஆட்களோடு பழகாதீர்கள். பணத்தை விட நல்ல குணங்களைப் பெரிதாக மதிக்கும் நபர்களோடு பழகுங்கள்.

பண ஆசை உங்களுக்குள் வேர் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்களை விட, குடும்பத்தை விட, உங்களைவிட, பணம் முக்கியம் இல்லை. பணம் தேவைதான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடாது.

இனியாவது பணத்தின் பின்னால் ஓடாமல் போதும் என்ற மனதோடு புன்னகையோடு வாழ்வோம். இறைவன் கொடுத்த வாழ்க்கையை ரசித்து அனுபவிப்போம்.

பணத்தின் பின்னால் ஓடினாள் நமக்கு நஷ்டம்தானே தவிர, லாபம் இல்லை என்பதை உணர்வோம். மனிதநேயத்தோடு வாழ்வோம் இனிமையான வாழ்க்கையை ரசித்து வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com