நுட்பமாக சாதிக்க வேண்டுமா? இந்த 9 வழிகள் போதுமே!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

வ்வொரு மனிதனும் விரும்புவது எப்படியாவது சாதிக்க வேண்டும் என்றுதான். வாழ்க்கையில் சாதிக்க சில நுட்பங்கள் உள்ளது.

அந்த நுட்பங்களை கற்றுக் கொள்பவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகிறார்கள். ஏதோ கடமைக்கு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் "எங்க அப்பனும் கச்சேரிக்கு போகிறான்" என்று அதுபோல் ஏதோ நாமளும் முயற்சி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் அதற்கான பலன் நிச்சயம் இல்லை. இனி தடைகள் இல்லாமல் வாழ்வில் எப்படி வெற்றி பெற முடியும். அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.


சாக்கு போக்குகள் சொல்லக்கூடாது

எதையாவது செய்ய முடியவில்லை என்றாலோ அல்லது செய்ய விருப்பமில்லை என்றாலோ அதற்காகக் காரணங்களை கண்டுபிடித்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதேபோல, ஒரு விஷயத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும் அதற்காக ஏதாவது சாக்குப் போக்குகளைச் சொல்லி தப்பிப்பதற்கு பலரும் முயற்சி செய்திருப்பீர்கள். எனவே நீங்கள் எதையாவது எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கு எந்த காரணங்களையும் சொல்லித் தட்டிக் கழிக்கக் கூடாது.

முன்னிலைப்படுத்த வேண்டாம்

கிட்டத்தட்ட அனைவருமே ஒரு சில விஷயங்களால் மிகப்பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலருக்கு, அத்தகைய பாதிப்பின் தாக்கம் வாழ்நாள் முழுவதுமே இருக்கும். ஆனால், வாழ்வில் அடுத்தடுத்து முன்னேறிச் செல்ல வெற்றியாளராக மாற நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன், என்னால் முடியாது என்பதை திரும்பத் திரும்பச் சொல்வதை, அவ்வாறு நினைப்பதை நிறுத்த வேண்டும்.

புகார்கள் சொல்வதை நிறுத்துங்கள்

பிரச்னைகள் எல்லாருக்கும் இருக்கிறது. சிலருக்கு வாழ்க்கையே பிரச்னையாக இருக்கிறது. எனவே, அதைப் பற்றிய புகார்களை சொல்வதை நிறுத்துங்கள். புகார்கள் சொல்லிக்கொண்டே இருப்பது பிரச்னைகளுக்கான தீர்வாக இருக்காது. புகார்கள் என்பதையே உங்கள் வாழ்விலிருந்து விலக்கி அதற்கான தீர்வுகளை கண்டறிவதற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள்.

எல்லைகள் வகுக்காமல் இருப்பது

எப்படி பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க ஏதாவது காரணங்களைத் தேடுவது தவறோ, அதேபோல எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு ஆம் நான் செய்கிறேன், என்னால் முடியும் என்று சொல்வதும் தவறு. இதுதான் என்னுடைய எல்லை என்று இதற்கு மேல் நான் எதையும் செய்ய மாட்டேன் என நீங்கள் எல்லை வகுப்பது வாழ்வில் மிகவும் முக்கியமாகும்.

குறிக்கோள்கள் கண்டறியுங்கள்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய அல்லது அடைய வேண்டிய விஷயங்கள் பற்றி ஒரு பட்டியலை வைத்திருக்க வேண்டும். அதில் பெரிய பெரிய குறிக்கோள்கள் முதல் உங்களுக்கு பிடிக்கும் சின்ன சின்ன செயல்களை நிறைவேற்றுவதை பல விஷயங்கள் இருப்பது வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் உங்களை கடினமாக உழைக்கவும் வைக்கும்.

இதையும் படியுங்கள்:
இந்த உயிரினங்கள் பற்றித் தெரியுமா உங்களுக்கு?
Motivation Image

தோல்வியைப் பற்றிய பயம் வேண்டாம்

நான் தோற்று விடுவேன் என்ற பயம் இருந்தால், உங்களால் உங்களுக்கு தெரிந்த செயல்களை கூட சிறப்பாக செய்ய முடியாது. எனவே உங்களுக்கு வெற்றி என்றால் என்னவென்று தெரியாது. வாழ்வில் தோல்வியும் வெற்றியும் ஒரு அங்கம்தான் எனவே, தோல்வியைப் பற்றிய பயம் தேவையில்லை

எல்லாமே என் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்

ஒரு சில செயல்கள் மட்டும் தான் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களை அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களையும் நீங்கள் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.

நெகட்டிவிட்டியைத் தவிர்த்திடுங்கள்

ஒவ்வொரு பக்கத்துக்கும் இரண்டு நாணயங்கள் இருப்பது போல வாழ்க்கையில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என்று இருக்கும். எனவே, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நெகட்டிவான விஷயங்களைப் பற்றி தவிர்த்திடுங்கள்.

நன்றியுணர்வுடன் இருங்கள்

கிராடிட்யூட் என்பது நன்றியுணர்வு இருப்பது மற்றும் உங்களுக்கு கிடைத்ததற்கு நன்றி செலுத்துவது என்பது உங்களை வாழ்வையே அற்புதமாக மாற்றும் ஒரு மேஜிக் ஆகும். உங்களுக்கு நேர்ந்த பிரச்னைகளுக்கு கோபப்படுகிறீர்கள் அல்லது கவலைப்படுகிரீர்களோ, அதேபோல உங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களுக்கு நீங்கள் நன்றி உணர்வுடன் இருப்பது உங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com