
வாழ்க்கையில் வெற்றிபெற நம் எண்ணங்களே காரணம். நம் எண்ணங்கள் முடங்கிக் கிடந்தால் வெற்றியின் முகவரி சிந்தனைக்கு அகப்படாது. மனம் முழுக்க ஆக்கபூர்வ எண்ணங்கள் மலர்ந்தால்தான் வெற்றியின் அரும்புகள் நம் மனதில் துளிர்விடத் தொடங்குவதை நம்மால் உணரமுடியும்.
எதிலும் எப்போதும். துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடிய மனவலிமை வேண்டும். வெற்றிக்கு நேர நிர்வாகம் அவசியம் என்பதால் நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்துகொள்ள வேண்டும்.
பிடித்த செயலையே செய்யவேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் செயலை பிடிச்சமானதாக மாற்றிக்கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.
வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் தேங்கி விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணரமுடியும்.
மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல தலைமை பண்பு உள்ளவராக ஆகமுடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே! விழுவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். எவ்வளவு மோசமாக விழுந்தாலும் உடனே எழுந்து விடுங்கள்.
எடுத்ததற்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு எப்போதும் நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். வெற்றிக்கான முதல் சாவி உழைப்புதான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
இது முடியாது! இது கஷ்டம்! இது நடக்காது! போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்!
வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் சந்தோசம் என்பது பணத்தால் மட்டும் வருவது இல்லை. அதனால் உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நாளை பார்க்கலாம், என்று எதையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக் கூடும்.
வெற்றி உடனடியாக கிடைத்துவிடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக, ஆனால் உறுதியாக முன்னேறலாம். தொழிலில் பல சிக்கல்களும், இடையூறுகளும் வரும் என்றாலும் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க முயலுங்கள்.
எந்த செயலை செய்தாலும் அதில் 100% ஆர்வம் கொண்டு செய்ய முயலுங்கள். அப்போதுதான் எவ்வளவு கடினமான பணியையும் உங்களால் மிக சுலபமாக முடிக்க முடியும்.
வாழ்க்கை வாழ்வதற்கே வெல்வதற்கே! என்பதை எப்போதும் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் இன்றைய நாள் நிச்சயம் எனக்கு நல்லதாக இருக்கும் இந்த நாள் புதிதாக ஒரு விஷயத்தை தெரிந்து கொள்வேன், என்ற சபத்தை மேற்கொள்ளுங்கள். இது புத்துணர்வை தரும் வெற்றி மேல் வெற்றியை தேடிதரும்!
வாழ்க்கையின் அஸ்திவாரம் நம்பிக்கைதான் மனதளவில் நிகழும் ஒவ்வொரு மாற்றமும் செயலோடும் கைகோர்க்க வேண்டும் எவ்வாறு உருவாகும்போது வெற்றி பூக்களை நம்மால் பறிக்க முடியும். வெற்றி என்னும் ஏணியில் நம்மால் அத்தனை படிகளையும் தாண்டி வெற்றிக் கொடியை ஏற்றலாம்.
வெற்றி நமதே!
ஜெயம் நமக்கே!