

நினைப்பது மாதிரி எப்பொழுதும் நடைபெறாது என்பது எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த ஒன்றுதான். அப்படியிருக்கையில் எப்பொழுதும் வாழ்க்கையில் ஏறுமுகமாக இருக்கும் என்பதும் சாத்தியம் இல்லை.
வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் சந்திக்க வேண்டியது யதார்த்தமானது ஆகும். வெற்றியை வெகு விமரிசையாக கொண்டாடும் பலரால் தோல்வியை எதிர்கொள்ள தெரியவில்லை என்பது தோல்வியைவிட கசப்பான உண்மை.
தொடர்ந்து முன்னேறி சென்றுகொண்டே யாராலும் எப்பொழுதும் இருக்கமுடியாது என்பதும் உண்மை. முன்னேறி செல்லும் பாதையில் இடர்கள் தோன்றுவது இயற்கையின் நியதி.
எவ்வளவு முன் கூட்டியே திட்டமிட்டாலும் செயல்படுத்தும் சமயத்தில் தனி நபரின் எதிர்பார்ப்பு, கட்டுப் பாட்டுகளையும் மீறி சில செயல்கள் நடைபெறுவதை முன் கூட்டியே கணிக்கவும், தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட தருணங்களில் தோல்வியை தழுவது இன்றியமையாவது ஆகும். எதிர்கொள்ளதான் வேண்டும்.
அப்படிப்பட்ட தோல்விகள் ஷாக்கிங் ஆக. இருப்பத்துடன் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமைக்கும் கொண்டு செல்லும்.
வேறு வழியில்லை சந்தித்துதான் ஆகவேண்டும். அல்லது புறக்கணிக்கவோ முடியாது.
வேகமாக நகரும் நிஜவாழ்க்கை பயணத்தில் எந்த நிகழ்வும் அந்த குறிப்பிட்ட தருணத்தில் மட்டும்தான் நடைபெறுகிறது. பிறகு அது கடந்தகால நிகழ்வில் இடம்பெற்று விடுவதாலும், எதுவும் நிரந்தரம் இல்லாததும் ஆன சூழ்நிலையில் சந்திக்கும் அல்லது எதிர் கொள்ளும் தோல்விகளும் நிரந்தரம் அற்றவை. நேரம் நகர்வதால் எந்த வகை தோல்விக்கும் விடை கிடைக்கும், முடிவும் ஏற்படும்.
தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒரு அங்கம் என்பதை உணர்ந்து அடுத்த கட்ட பயணத்தை தொடர்வது இன்றைய கால கட்டத்தில் அத்தியாவசியமாகிவிட்டது.
எனவே சந்திக்கும் தோல்விகளை சரி செய்ய விபரீத முடிவுகள் எடுப்பது தொடர்ந்து செயல்படுத்துவது போன்றவைகளை அறவே தவிர்க்கவேண்டும்.
அவை தோல்விகளை கடந்து செல்வதற்கான தீர்வுகள் கிடையாது. அத்தகைய முடிவுகள் பற்றி நினைப்பது கோழை தனத்தையும், கையாலாகாத தனத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
அனுபவம் இன்மை, பயம், பரிதவிப்பு, பிறர் ஏளனம் செய்வோர்களோ என்ற வேண்டாத சிந்தனை, எப்படி எதிர் கொள்வதோ என்ற குழப்பம், சரிவர ஆலோசனை இல்லாத நிலைமை, அனாவசிய டென்ஷன், ஆதரவற்ற நிலைமை ஆகியவைகள் காரணங்களாக அமையக்கூடும் விபரீத முடிவுகளை நோக்கி செல்ல.
இவற்றை தவிர பெரும் பாலான விபரீத முடிவுகளுக்கு வழி வகுப்பது முன் கூட்டியே திட்டம் எதுவும் இடாமல்
திடீர் என்ற அந்த தருணத்தில் முடிவு செய்வதினால் ஏற்படும் விபரீதம் ஆகும்.
இத்தகைய தீவிரமான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை தவிர்க்க தேவையான முதல்படி நேரம் தாமதிப்பது. நடவடிக்கை எடுப்பதை தள்ளிப்போடுவது கூடுதல் அல்லது போதிய அவகாசத்திற்கு வழி வகுக்கும்.
அவ்வாறு செய்வதால் தோல்வியினால் ஏற்பட்ட வீரீயம் குறைய வாய்ப்பு அதிகரிக்கும். அதன் பயனாக நல்ல முடிவை எடுக்க முடியும்.
தேவையற்ற விபரீத முடிவை எடுத்து செயல்படுவதினால் ஏற்பட்ட தோல்வி வெற்றியில் முடியாது. அதற்கு பதிலாக கூடுதல் சுமைகள், பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.
தோல்வியிலிருந்து மீண்டு மீண்டும் வந்து வெற்றிபெற பதட்டம், பயம், அனாவசிய டென்ஷன் போன்றவை கை கொடுக்காது.
மனோதைரியம், தன்னம்பிக்கை, தோல்வி தழுவியதின் உண்மையான காரணங்கள் இவற்றை அறிந்து முன்னேறுவதற்கு தகுதியான, தேவையான நடவடிகைகளில் முழு கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது.
நம்பிக்கைக்கு பாத்திரமான அனுபவம் மிக்க நபர்களிடம் ஆலோசித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம். அதே போல் சிறந்த அனுபவம் மிகுந்த கவுன்சிலிங்கில் ஈடுபட்டவர்க்களிடம் உரிய கவுன்சிலிங் பற்றி கலந்து ஆலோசித்து அவரது அறிவுரைபடி செயல்படுவது சிறந்த நடவடிக்கையாகும்.
தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை புரிந்துக்கொண்டு முன்னேற முனைவது தீவிர விபரீத முடிவுகள், செயல்பாடுகளுக்கு நிரந்தர தீர்வாகும்.