வாழ்க்கை வாழ்வதற்குத்தான் "வாழத்தொியாமல் வாழ்ந்துவிட்டு பிறறையோ, சொந்த பந்தங்களையோ, இறைவனையோ, நொந்து கொள்வதில் என்ன கிடைக்கப்போகிறது? எனக்கும் அதிா்ஷ்டதுக்கும் வெகுதூரம் என நொந்து கொள்வதால் என்ன பயன் ஒன்றும் இல்லை!
ஒரு பொருளை தொலைத்துவிட்டு தேடுவதுபோல், கடவுள் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை தொலைத்துவிட்டு வாழ்க்கையே அமையவில்லை என புலம்புவதில் என்ன பயன்? தொலைந்துபோன வாழ்க்கையை மீன்டும் கண்டுபிடியுங்கள். திட்டமிடாமல் நடத்தும் எதுவும் சாியான பாதையில் செல்வதில்லை.
குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்காதீா்கள்! அவர்கள் கேட்டவுடன் வாங்கித்தரும் பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்கள்! வறுமையில் வளர கற்றுக்கொடுங்கள்.
நன்கு படிக்க வைத்து வேலைக்கு அனுப்புங்கள். நல்ல நெறி முறைகளோடு பிள்ளைகளை வளா்க்க வேண்டும். தோளுக்கு உயர்ந்து திருமணமும் செய்துவிட்டால் குடும்ப பொறுப்புகளை மகன் மருமகளிடம் விட்டு விடுங்கள்.
நாற்பது வயதுக்குள் வீடு கட்டுவது கடன்களை அடைப்பது போன்ற செயல்பாடுகளை தவறவிடவேண்டாம்.
கடன் வாங்கி வீடு கட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியத்தைக் கடைபிடியுங்கள் ஏறக்குறைய 50 வயதிற்குள்ளாகவாவது வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுங்கள்.
ஓய்வு காலத்தில் பெண்சன் குறைவாக வரும், வேலையில் இருக்கும்போது நிறைய ஊதியம் வரும் அதைக்கொண்டு அதற்கேற்றாற்போல வாழ்ந்திருப்போம்.
ஓய்வு காலத்தில் அப்படி அல்ல. நடுத்தர குடும்பத்தினா்கள்தான் அதிக முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.
வயது ஆக ஆக நோய்கள் அழையா விருந்தாளியாய் ஒன்றன் பின் ஒன்றாய் அணி வகுக்கும். அப்போது மருத்துவ செலவு செய்ய பிள்ளைகள் கையை எதிா்பாா்க்க வேண்டும். நீங்களே குறிப்பிட்ட தொகையை சேமிப்பில் இருக்கட்டும் என பக்குவப்படுதே நல்லது.
உணவு வகைகளில் கட்டுப்பாடு இருப்பது நல்லதே. கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புாிந்து விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே வாழ்க்கை வசந்தமாகும்.
தேவையில்லாத ஜவுளி வகைகள் தட்டு முட்டு சாமான்கள் என வாங்கி குமிக்காதீா்கள்.
இறை வழிபாட்டில் கவனம் நல்லதே. வருமுன் காப்பதுபோல சேமிப்பு இல்லா வாழ்க்கை வயதான காலத்தில் அல்லல்தான், மன உளைச்சலைத்தான் தரும். ஆடம்பர வாழ்க்கை அடுத்தவருக்காக வாழ்வது வீண் ஹம்பக்தான்.
ஆண்டவன் கொடுத்த வாழ்க்கையை அளவோடு வாழக்கற்றுக் கொள்வதே சிறந்தது. அதை விடுத்து அடுத்தவரைக்கண்டு பொறாமைப்படுவது, எனக்கு கொடுத்துவச்சது அவ்வளவுதான் என்ற புலம்பல் தேவையில்லையே!
கடைசி வரை உழைப்பை கைவிடாதீா்கள். சோம்பிக்கிடந்தால் சுறுசுறுப்பு போய் தூக்கமே குடியேறும். அப்போது சிலந்தி நம் உடலில் கூடு கட்டத்தயங்காது.