வாழ்க்கையில் உரமாகி உயர வேண்டும்!

Motivation articles...
Motivation articles...

நாம் வாழ்க்கையில் எப்பொழுதும் நல்லவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். பாசிட்டிவான கருத்துக்களை முன்வைத்து பேச்சிலும் சரி செயலிலும் சரி செயல்பட வேண்டும். சிலர் வேண்டுமென்றே நெகடிவ் ஆகவே பேசுவார்கள் இது அவர்களுக்கு ஒரு காலகட்டத்தில் பெரும் சங்கடத்தை தரும். இதை விளக்கும் ஒரு சின்ன கதைதான் இது.

ஓர் ஆசிரமத்தில் இருந்த எல்லோருக்கும் ஒரு சீடன் பெரும் தலைவலியாக இருந்தான், ஆசிரமத்தின் எந்த நடைமுறைக்கும் அவன் கட்டுப்படுவதில்லை. குருவுடன் எங்காவது பயணம் செல்லும்போது, கூட்டத்திலிருந்து ரொம்பவே பின் தங்கித் தனியாளாக நடந்து வருவான். சாப்பிட அமர்ந்தால், எல்லோரும் எழுந்த பிறகும் சாப்பிட்டுக் கொண்டிருப்பான். குரு சுவாரசியமாகப் பாடம் நடத்தும்போது தூங்கி விழுவான்.

ஆசிரமத்தில் மற்ற சீடர்கள் வைத்திருக்கும் பல பொருட்கள் அடிக்கடி காணாமல் போய்க் கொண்டிருந்தன. இவன்தான் திருடிக்கொள்கிறான் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர்கள், ஒருநாள் குருவிடம் கூட்டமாகப் போய்ப் புகார் செய்தார்கள்.

அவனைக் கூப்பிட்டு விசாரித்தார் குரு. அந்தச் சீடன் தன்னைப் புத்திசாலி போலக் காண்பித்துக்கொண்டு, அவரிடமே தத்துவம் பேசினான். "நல்லதைப் படைத்த ஆண்டவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான். நல்லவற்றை மனதார ஏற்பதுபோலக் கெட்டதையும் ஏற்றால் என்ன?" என்றான்.

குரு சிரித்தார். "நீ விரும்பியபடி கெட்டதையும் ஏற்கலாம்" என்று சொல்லி அவனை அனுப்பினார். 'குரு என் அவனைத் தண்டிக்கவில்லை?' என்று ஏமாற்றத்துடன் மற்ற சீடர்கள் கலைந்தனர்.

மதிய உணவுவேளை வந்தது. மற்ற சீடர்கள் எல்லோருக்கும் சாதம், காய்கறிக்கூட்டு சுடச்சுட வந்தது. இந்த ஒரு சீடனுக்கு மட்டும் நெல் குத்திய உமியும், காய்கறிகளை வெட்டியதில் மிஞ்சிய கழிவுகளையும் ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். அதிர்ச்சியுடன், "என்ன இது என்று அவன் கேட்டான். குரு உங்களுக்கு இதைத்தான் கொடுக்கத் சொன்னார்" என்று சொன்னார்கள், அன் அமைதியாக எழுந்து வந்துவிட்டான்.

இதையும் படியுங்கள்:
128 ஆண்டுகள் பழமையான, 50,000 புத்தகங்கள் கொண்ட நவீன நூலகம் எங்கு உள்ளது தெரியுமா?
Motivation articles...

இரவு வந்தது. மதியமே சாப்பிடாததால், பெரும் பசியுடன் அவன் உணவுக்கூடத்துக்குப் போனாள். மற்றவர்களுக்குப் பாலும் பழமும் தரப்பட்டன. இவனுக்கு ஒருகிண்ணத்தில் பால் வைத்தார்கள். பழத்துக்கு பதியக்கு பசு மாட்டுச் சாணத்தை இன்னொரு கிண்ணத்தில் வைத்துக் கொடுத்தார்கள்.

சீடன் கோபத்துடன் குருவிடம் சென்று முறையிட்டான்.

"பால், சாணம் இரண்டுமே பசுவிடம் இருந்துதானே கிடைக்கிறது. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணியை ஏற்றுக்கொள்ளக் கூடாதா?" என குரு கேட்டார்.

சீடன் விழித்தான்.

"மதியம் உமியையும் காய்கறிகளையும் நீ சாப்பிடவில்லையாமே? அரிசியைச் சாப்பிடும்போது, உமியைச் சாப்பிடக் கூடாதா?" என மீண்டும் கேட்டார்.

சீடன் தலைகுனிய, குரு தொடர்ந்தார்.

"எதை எதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று வரையறை இருக்கிறது. பால் போன்ற நல்லவற்றை, நாம் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அப்படியே ஏற்கலாம். சாணத்தை அப்படி ஏற்க முடியாது. அதனால் அதனை மண்ணில் புதைத்து உரமாக்குகிறோம். அது நிலத்தை வளப்படுத்தி தரும் விளைச்சலை ஏற்கிறோம்.

தீயவற்றை வாழ்விலிருந்து விலக்கி வைக்க வேண்டும். அவற்றைப் புதைத்து, அவை தரும் பாடத்தை வாழ்வுக்கு உரமாக்க வேண்டும். அதன் மூலம் உயரும் வல்லமை கற்க வேண்டும்" என்றார் குரு.சீடன் உண்மை புரிந்து மன்னிப்புக் கேட்டான்.

இனியாவது தீய எண்ணங்களை தீய செயல்களை வாழ்க்கையில் இருந்து தூர ஒதுக்கி வைத்துவிட்டு மகிழ்ச்சியோடு வாழ்வோம் நமக்கு அனைத்தும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com