motivation image
motivation imageImage credit - pixabay.com

என்ன படிக்கலாம்? எப்படி ஜெயிக்கலாம்…?

Published on

பொறியியலும், மருத்துவமும் மட்டும்தான் படிப்பு என்பதில்லை. நூற்றுக்கணக்கான படிப்புகள் உலகத்தில் இருக்கின்றன. முதலில் இந்த விசாலமான பார்வை பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெற்றோர்க்கும் வேண்டும். தான் படிக்காத படிப்பை தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பிள்ளைகளைத் கல்விச். சிலுவையில் அறைகிறார்கள். இது சரியல்ல. முற்றிலும் நேர்மாறான இயல்புடைய பிள்ளைகளைத் தங்கள் கனவுகளை சில பெற்றோர்கள் சுமக்கச் செய்வது நல்லதல்ல. பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்தும் சிறகாக இருக்க வேண்டுமே ஒழிய, அழுத்தும் சிலுவையாக இருக்கக் கூடாது. பிள்ளைகள் ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பின் மூலம் அடைய முடியாது.

தலையில் கட்டுக் குடுமி. காதில் கடுக்கன். நெற்றியில் பளிச்சென்று திருநீறு. ஒளி உமிழும் கண்கள் கொண்ட சிறுவன் சாமிநாதன்.  அப்பையனின் மேல் படிப்பிற்கு  ஆங்கிலமோ சம்ஸ்க்ருதமோ படிக்க வைக்க குடும்பப் பெரியவர், நீ ஆங்கிலம் படிச்சால் இந்த லோகத்திலே சௌக்கியமாக இருக்கலாம். சம்ஸ்க்ருதம் படிச்சா மேலுலகில் சவுக்கியமாக இருக்கலாம் என அட்வைஸ் கொடுக்க,

அவன் நான் தமிழ் படிக்கப் போகிறேன் என்றான்.

ஏன் என்று கேட்டதற்கு, "நான் தமிழ் படித்தால் இரண்டு உலகிலும் சௌக்கியமாக இருக்கலாம்." என்று பளிச் சென்று கூறினான். அப்படிக் கூறியவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர்.

மென்ஷியால் என்பவன் மேல் நாட்டுச் சிறுவன். இவன் தந்தையை இழந்தவன். தாயோ கடினமான நெசவுத் தொழில் செய்து  துணி விற்று பொருள் ஈட்டி மகனைப் படிக்க வைத்தாள். மகனோ படிப்பில் நாட்டமில்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான். இவன் பள்ளிக்கூடம்  போக வேண்டாம் என முடிவெடுத்தான். விலை உயர்ந்த துணியை அவன் தாய் நெய்து கொண்டிருந்தபோது ஆசையாய் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு,

"எனக்குப் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை நானும் உன்னுடன் இந்த துணியை நெய்ய உதவுகிறேன்." என்றான்.

அடுத்த நிமிடம் கோபாவேசமாக அந்த தாய் விலை உயர்ந்த துணியைக் கிழித்து எறிந்தாள். பதறிப்போன மகன்," என்னம்மா? விலை உயர்ந்த துணியை  இப்படிச் செய்து விட்டாயே" என்று கேட்க...

இதையும் படியுங்கள்:
நச்சு நீக்கியாகப் பயன்படும் அன்னாசிப்பூ டீடாக்ஸ் வாட்டரின் 7 நன்மைகள்!
motivation image

அவள் விலை மதிப்பில்லாத கல்வியை  நீ இழக்கிறாய். எதர்காலத்தைப் பாழாக்குகிறாய். அதைவிடவா இது பெரிய அழிவு  என்றாள்.

தாயைக் கட்டிக் கொண்டு அழுத மகன் பள்ளிக் கூடம் செல்ல ஒப்புக் கொண்டான். உருவாக்குவதுதான் பெற்றோர் வேலை. உறுக்கி ஊற்றுவது பெற்றோர்கள் வேலை அல்ல. விரும்பிப் படிக்க வேண்டிய கல்வியைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்கள்  உயர்வது திண்ணம். உதாரணம் உ.வே.சாமிநாத அய்யர். அப்படி இன்றைய இளைஞர்களும் இருக்கப் பழகினால் வெற்றி நிச்சயம்.

logo
Kalki Online
kalkionline.com