

சாணக்கியர் ஒரு நாட்டின் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கும், குடிமக்கள் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் வரையறைகளை வகுத்துள்ளார். அவர் தனது அர்த்த சாஸ்திரத்தில் அரசியல், தத்துவம் மற்றும் அறிவுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். அவரது கோட்பாடுகள் பண்டைய காலத்தில் இந்தியாவில் நிலைக் கொண்டிருந்த அந்நியர் ஆட்சியை அகற்ற உதவியது. சாணக்கியரின் கருத்துகளைப் பின்பற்றினால் ஒருவர் எதிர்கால சிக்கல்கள் எதுவுமின்றி நிம்மதியாக வாழ முடியும்.
ஒரு மனிதனின் வாழும் தாழ்வும் அவருடைய நண்பர்களைப் பொறுத்து அமைகிறது. சாணக்கியர் இந்த ஐந்து வகையான மக்களுடன் நட்பு கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறார். அவ்வாறு நட்பு கொள்வது உங்களை விரைவில் வீழ்த்தி விடும் என்ற காரணத்தினால், அவர் எச்சரித்துள்ளார். அந்த ஐந்து வகையான நண்பர்கள் யார் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!
போலி நண்பர்கள்:
உங்களுடன் பழகும் நண்பர்கள் அனைவரும், உங்களுக்கு உண்மையாக இருப்பதில்லை. உங்களிடமிருந்து ஏதேனும் ஒரு ஆதாயம் கிடைக்கும் என்றே சிலர் பழகிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் முகத்திற்கு நேராக இனிமையாக பேசி நடிப்பார்கள். உங்கள் முதுகிற்கு பின்னால் புறம் பேசுவார்கள். உங்களிடம் பழகிக் கொண்டே உங்கள் எதிரியிடமும் நெருக்கமாக பழகுவார்கள். இவர்களின் நட்பு உங்களின் எதிரிக்கு சாதகமாக அமையும் , அல்லது இவர்கள் எப்போது சந்தர்ப்பம் கிடைத்தாலும் உங்களின் காலை வார தயங்கமாட்டார்கள்.
பொறாமை எண்ணம் கொண்டவர்கள்:
உங்களைப் பார்த்து பொறாமைக் கொள்ளும் ஒருவருடன் நட்பு பாராட்டாதீர்கள். நட்பு என்பது இரு நண்பர்களுக்குள் ஊக்கம் அளிப்பதாகவும் , சரிவு ஏற்படும் நேரத்தில் பிடித்துக் தாங்குபவராகவும் இருக்கவேண்டும். உங்கள் மீது உங்கள் நண்பர் பொறாமை கொண்டிருந்தால் அது வன்மமாக நாளை மாறிவிடும். அதன் பின்னர் உங்கள் நண்பரை உங்களுக்கு எதிரான வேலையில் இறங்குவார், உங்கள் வீழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருப்பார்.
உங்கள் வெற்றியை விரும்பாதவர்கள்:
உங்களது வளர்ச்சியையும் உங்களது வெற்றியையும் விரும்பாதவர் உங்களுக்கு உண்மையான நண்பனாக இருக்க மாட்டார் . அவர் உங்களை எப்போதும் தோல்வியுற்ற மனிதராகவே பார்க்க விரும்புகிறார். உங்களது தோல்வியின்போது உங்களுக்கு உதவுவதைபோல நடித்து, உங்களை அப்படியே தக்க நினைக்கிறார். மேலும் நீங்கள் வெற்றி பெற்றால் அவரை மதிக்கமாட்டீர்கள். அவரை விட்டு சென்றுவிடுவீர்கள் என்று எண்ணுவார்கள்.
அதிகம் பேசுபவர்களுடன் நட்பு கொள்ளாதீர்கள்:
கட்டுப்பாடு இல்லாமல் பேசுபவர்கள், பெரும்பாலும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள். அதிகம் பேசுபவர்களிடம் எந்த ஒரு ரகசியமும் தங்காது. உங்களது சில ரகசியங்கள் வெளியில் செல்வது உங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இவருடைய பழக்கம் உங்களது மரியாதையை சமூகத்தில் கெடுத்து விடும்.
குறுகிய சிந்தனை கொண்டவர்கள்:
தாராளமான சிந்தனை தாராளமான எண்ணங்களை வளர்க்கும், தாராள குணம் சமூகத்தில் மதிப்பையும் மரியாதையும் கொண்டு வரும். குறுகிய எண்ணம் கொண்டவர்கள், உங்களது முயற்சியில் தடையாக இருப்பார்கள். குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் மனநிலை ஒருபோதும் பெரிதாக சிந்திக்காது. அவர்கள் பெரிய பதவிக்கு உயர முயற்சிப்பதில்லை, பெரியதாக வளரவும் சிந்திப்பது இல்லை. தங்கள் நண்பரும் அப்படித்தான் வளராமல் இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களின் எதிர்மறையான மனநிலை, வெறுப்பு, கடுமையான வார்த்தைகள் ஆகியவை உங்களது சுய முன்னேற்றத்தையும் தடுத்துவிடும்.
இந்த ஐந்து வகையான நண்பர்களுடன் உங்களுக்கு நட்பு இருந்தால், அந்த நட்பை நீங்கள் தவிர்த்துவிடுங்கள்.