

என் தோழி எப்பொழுதும் வீட்டு வேலைகளை செய்துவிட்டு அதிலேயே உழன்று அப்படியே இருந்துவிடுவாள். மற்றவர்களிடம் பழகுவது இல்லை. இதனால் அவளுக்கு மனதில் ஒரு குழப்பம், சோர்வு ஏற்பட்டது. பின்னர் அவளின் உறவினர்கள் பார்த்துவிட்டு வெளியே நடப்பதற்கு அழைக்கச் சென்றனர்.
வெளியில் வந்து விட்ட பிறகு வீட்டு வேலைகளை சரிவர செய்ய முனைந்தார். அதிகம் நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனால் மனதில் இருந்த சோர்வு நீங்கி புதுவிதமான திருப்பம் ஏற்பட்டது.
அதிகமாக நடப்பதால் ஆழ்ந்த தூக்கம் வருகிறது. இதனால் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது. காலையில் எழும்பொழுது உற்சாகமாக இருக்கிறது. இந்த உற்சாகத்தினால் வீட்டில் வளர்க்கும் மீன், நாய் போன்றவற்றை சரிவர பராமரிக்க முடிகிறது. டிவி பார்ப்பது குறைந்துவிட்டது. படித்த காலத்தில் கற்று கைவிட்ட வீணையை திரும்ப எடுத்து வாசிக்க முடிகிறது.
எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடித்து விடுவதால், தினமும் மதியம் கொஞ்ச நேரம் உறங்குவதற்கு நேரம் ஒதுக்க முடிகிறது. அந்த ஓய்வு நேரத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்வதால் மீண்டும் உற்சாகத்தோடு எழுந்து பூ கட்டுவது, பூஜை செய்வது, பூஜை அறையை சுத்தம் செய்வது, புதுப்புது கோலங்கள் போடுவது என்று முன்பு இருந்த இயல்பு வாழ்க்கை வாழ முடிகிறது. என் மனதில் இருந்த குழப்பம், தயக்கம், சோர்வு எல்லாம் நீக்கி புது தெம்புடன் நடைபோடுவதற்கு இந்த நடைப்பயிற்சி நல்ல துணை புரிந்திருக்கிறது என்று கூறினார்.
முன்பெல்லாம் தூங்க செல்வதற்கு முன் ஏதோ ஒரு தலையணை என்று சோர்வாக படுத்துவிடுவேன். இதனால் தூக்கம் வராது .இப்பொழுது தூங்கச் செல்லும் முன் கொஞ்சம் கால்சியம் உள்ள உணவு சாப்பிடுகிறேன். நல்ல தலையணையில் உறங்குகிறேன். அதனால் நல்ல தூக்கம் வருகிறது என்கிறார்.
நடையில் என்ன இருக்கிறது என்று கேள்வி கேட்காமல், காலையில் எழுந்து நகைகளை அதிகம் அணியாமல், எளிமையாக ஒரு உற்சாக நடை போடுங்கள். அது உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.