

வாழ்க்கையில் நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் பல வகையில் கெட்டிக்காரத்தனமாக பழகினாலும், சில நேரங்களில் சில மனிதர்களிடம் ஏமாந்து போவதும், அதேநேரம் ஏமாற்றப்படுவதும் தொடா்கதையாகத்தான் உள்ளது.
பொதுவாக யாாிடமும் உறவு, மற்றும் நட்பு ரீதியில் நம்பிக்கை வைப்பதும் பிரச்னையை சொல்லி தீா்வு காண்பதிலும் பல சிக்கல்கள் வருகின்றன. எனக்கு அப்போதே தொியும்! நீ ஏன் அவர்களிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும், நான் எதிா்பாா்த்ததுதான் நடந்துள்ளது. சமீபகாலமாகவே அந்த நபரின் நடவடிக்கையில் நம்பிக்கை இல்லை என நமக்கு நமக்காக பேசுபவர்களே அதிகம்.
அப்படிப்பட்டவர்கள் நமது முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டை என்பதை நாம் புாிந்துகொள்வதே நமக்கு நல்லது.
இதைத்தான் அந்த காலத்திய அனுபவஸ்தர்கள் சொல்லுவாா்கள் அயோக்கியனை நம்பிவிடுவதும், யோக்கியனை சந்தேகப்படுவதையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று. ஆனால் நாம் அவர்கள் பேச்சை கேட்பதே இல்லையே!
மனைவி வந்ததும் தலையணை மந்திரத்தில் மயங்கி தாய் தகப்பனை மறந்துவிடுவதும், அவர்களை எப்படி துரத்தலாம் என்ற குறிக்கோளோடு வாழ்வதென்ன வாழ்க்கையா?
பல குடும்பங்களில் இந்த அவல நிலை நீடிக்கிறதே!அது முறையா, அது தர்மமா! சரி அதென்ன புாியாத விக்கிரமாதித்தன் கதைபோல, புகுந்த வீடு வந்த பெண் தன்னுடைய அப்பா அம்மா தம்பி தங்கைகள் எப்படி வாழ்கிறாா்களோ, வயதான காலத்தில் எப்படி சிரமப் படுகிறாா்களோ, என அடிக்கடி கவலைப்படுகிறாா்கள்.
இது தொடர்பாக கணவனிடம், மாமனாா் மாமியாரிடம், சொல்லும் மருமகள்கள் தனது மாமனாா் மாமியாரும் வயதானவர்கள் அவர்களுக்கு நாம்தானே உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் வருவது இல்லை.
அதில் கணவனும் இருதலைக்கொள்ளி எறும்புபோல முடிவு காணமுடியாமல் இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளப்படுவதும் பல இடங்களில் நடைபெறும் ஒன்றாகஉள்ளதே. அதுவே வேதனையான விஷயம்தானே.சில பெண்கள் புகுந்த வீட்டுவிஷயங்களை பிறந்த வீட்டிற்க்கு தெரியப்படுதக்கூடாது , அந்த பழக்கம் நல்லதல்ல. நம்மிடம் உயர்ந்த குணமும் நல்ல பண்பாடும் ஏன் வருவதில்லை.
அதேபோல வாழ்க்கையில் முன்னேற வாய்ப்பகள் தானாக வரும் என்ற கொள்கையிலிருந்து மனிதன் வெளியே வரவேண்டும், மனைவி சம்பாத்தியத்தில் வாழலாம் என நினைப்பதும் தவறு உத்யோகம் புருஷ லட்சணமல்லவா!
தன்னுடைய வாய்ப்பை தானே தேடிச்செல்பவனே நல்ல மனிதனாவான். தனக்கென்ற வாய்ப்புகளை சரிவர பயன்படுத்திக்கொள்பவனே புத்திசாலி. எதற்கும் யாரையும் சாா்ந்திருக்காமல் தனது சுயம் அறிந்து தன்கையே தனக்கு உதவி என உழைப்பின் மேன்மை அறிந்து, திருடாமல் பொய் சொல்லாமல் எந்த வேலையாய் இருந்தால் என்ன கெளரவம் பாா்க்காமல், தாழ்வு மனப்பான்மை விலக்கி, உழைப்பின் தன்மையை கடைபிடித்து வாழ்ந்து பாா்த்தால் என்ன குறைந்துவிடும். அதனால் கிழக்கே உதிக்கும் சூாியன் மேற்கிலா உதிக்கும்.
ஆக, அடுத்தவரை நம்புதல், மனைவி வருவாயில் அடிமையாய் வாழ்வது, கிடைத்த வேலைக்கு போகாமல் சோம்பேறியாய் காலம் தள்ளுவது, இதெல்லாம் நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் கொள்ளியாகும். அதேபோல மாமனாா் ,மாமியார் உறவு வேண்டும் என நினைத்து மனைவி சொல் பேச்சு கேட்டுபெற்ற தாய் தகப்பனை கைவிடுவது மகாபாவம்.
இதனில் முடிவாக ஒன்றை தொிந்துகொள்ளுங்கள். புண்ணியம் தேடி காசி, பாவம் போக்க கங்கைபோனாலும், தாய்தந்தையை தவிக்கவிட்டு செல்பவர்களை சட்டத்தை விட தெய்வம் அதிகமாவே தண்டித்துவிடும் என்ற விஷயத்தை உணர்வதே நல்ல வாாிசுகளுக்கு அழகாகும்!