மனம் சொல்லும் சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

Give importance to what the mind says!
Motivation articles!
Published on

ந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவு எடுப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஒரே நேரத்தில் இரண்டு வேலை கிடைத்து விட்டது எந்த வேலைக்கு போகலாம்? புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் எந்த போன் வாங்கலாம்? அலுவலகத்தில் அதிக மனஅழுத்தம் உள்ளது, வேலையை விட்டு விடலாமா வேண்டாமா? இவ்வாறு குழப்பமான மனநிலையில், சரியான முடிவு எடுப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்

பெரும்பாலான மக்களுக்கு முடிவு எடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தவறான முடிவு எடுத்து விடுவோமோ என்ற அச்சம் இருக்கும். இதற்கு எளிய முறையில், குழப்பமான மனநிலையில் சரியான முடிவு எடுப்பது எப்படி என்பது பற்றி சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

பொதுவாக குழப்பம் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மனதும், புத்தியும் முரண்படும்போது செய்வதிறியாது இருக்கும் நிலையே குழப்பம் ஆகும். மனம் ஒன்று சொல்லும், புத்தி ஒன்று சொல்லும். உதாரணத்திற்கு கடன் பிரச்னையால் வீட்டை விற்கும் நிலையில் இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

‘இது நமது குடும்ப வீடு, இதை விற்க வேண்டாம்’ என்று மனம் சொல்லும். அதேபோல், ‘வீட்டை விற்று விடலாம், வரக்கூடிய தொகையை வைத்து கடனை அடைத்து விட்டு,சிறியதாய் மற்றொரு வீட்டையும் வாங்கலாம்’ என்று புத்தி சொல்லும்.

இதையும் படியுங்கள்:
தோல்வி கண்டு பயப்படாமல் முயற்சித்துப் பாருங்கள், வெற்றி நிச்சயம்!
Give importance to what the mind says!

எப்போதும் மனம் சொல்லும் முடிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அதே நேரத்தில், நாம் எடுக்கும் முடிவால் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ துன்பம் வரும் என்றால், அப்போது மட்டும் புத்தி சொல்வதை கேட்கலாம்.

ஒருவேளை மனம் சொல்வதை கேட்டாலும் பிரச்னை, புத்தி சொல்வதை கேட்டாலும் பிரச்னை. இந்த நிலையில் என்ன செய்யலாம். எந்த முடிவு எடுத்தால், 0.1% அளவு வித்தியாசத்தில் பிரச்னை குறைவாக வருமோ அந்த முடிவை எடுக்கலாம்.

மேலும், எந்த ஒரு முடிவு எடுத்தாலும், அதனால் பிரச்னைகள் வருமாயின் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பிரச்னைகள் வந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டு பயப்படும் மக்கள், கடைசி வரையில் சரியான முடிவை எடுக்காமல் அவதிப்படுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com