

வீழ்ந்து விட்டோம் என விசனம் கொள்வதால் என்ன பயன்?. அதனை சமாளிக்க வழிதொியாமல் முடங்கிவிட்டால் முழுமையான தெளிவு வந்துவிடுமா என்ன? இதற்கு ஏன் அடுத்தவர் ஆலோசனை. நம்மால் முடியாதா? நம்மால் வெற்றிவாகை சூட இயலாதா! முடியாது, இயலாது, என்ற வாா்த்தை எங்கிருந்து வந்தது.
அதை தேடிப்பாா்க்கவேண்டாமா? அப்போது கிடைக்குமே தன்னம்பிக்கை. யானையின் பலம் தும்பிக்கையிலே என்ற வரிகளை அனைவரும் புாிந்து கொள்ளும் வகையில்அதை உணர்வு பூா்வமாக நம்மால் சொல்ல முடிகிறது.
அதேநேரம் நம்மிடம் உள்ள தன்னம்பிக்கையானது அளவுக்கு அதிகமாக இருப்பதை ஏன் நம்மால் உணரமுடியவில்லை.
ஆக தவறு நம்முடையதுதான். காரணம் நம்முடன் பயணிக்கும் சோம்பலும், தாழ்வு மனப்பான்மையும்தான். இந்த இரண்டும் நம்மைவிட்டு அகல அதற்கான வழிமுறை என்ன என்பதையும் தோல்வியிலிருந்து மீள்வது எப்படி என்ற பூதக்கண்ணாடி ஆராய்ச்சியிலும் இறங்க வேண்டாம்.
அப்போது நம்மிடம் இருக்கும் விடாமுயற்சியின் துணைகொண்டு தன்னம்பிக்கை எனும் படிக்கட்டுகளைத்தாண்டி உழைப்பு எனும் உளி கொண்டு வெற்றி எனும் சிலையை உருவாக்கலாமே!
அந்த விஷயத்தைக்கையாள நிதானம் எனும் மருந்தை பயன்படுத்தி சிலையை பிரதிஷ்டை செய்யலாமல்லவா! அப்போது வெற்றி தேவதை நம்பக்கம் வந்து நமக்கு விஸ்வரூப காட்சி தந்து விவேகம் எனும் பிரசாதம் கிடைக்க செய்வாளே.
ஆக, வீழ்வதும் ஒரு அனுபவ பாடம்தான். அதிலிருந்து மீள்வதும் அனுபவம் நமக்கு கற்றுத்தந்த பாலபாடமல்லவா? எடுத்தவுடன் எட்டாம் வகுப்பிலா சோ்ப்பாா்கள்! அடிப்படையிலிருந்துதானே ஆரம்பமாகும். அதேபோல எடுத்தவுடன் எதுவும் கைக்கு கிடைத்துவிடாது.
உழைப்பு, உழைப்பு இவைகளில் நமது எண்ணமும் ஊக்கமும் இருந்தாலே போதும் அதுதான் வெற்றிக்கான மூலமந்திரம்.
உழைக்காமல், வியர்வை சிந்தாமல் எதுவும் எளிதில் கிடைத்து விடாது.
அப்படியே கிடைத்தாலும் அது நிலைக்காது என்பதை உணர்ந்து தெய்வ நம்பிக்கையுடன் யாருக்கும் தீங்கு செய்யாமல் நல்ல எண்ணம், தூய்மையான சிந்தனை இவைகளுடன் மனசாட்சியே தெய்வ சாட்சியாக நினைத்து தன்னம்பிக்கை தளரவிடாமல் உழைப்பவரே உயர்ந்தவர் என்ற தத்துவத்துடன் வாழ்வதே சிறப்பானதாகும்.
இந்த நேரத்தில் மகாகவி பாரதி சொன்ன வாா்த்தையான நான் வீழ்ந்துவிட்டேன் என நினைத்தாயோ என்ற வரிகளை நினைவில் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்! அதோடு நான் என்ற அகம்பாவத்தையும் தொலைப்பது சாலச்சிறந்த ஒன்றாகும்!