
எல்லாவற்றையும் இறைவன் மேல் போட்டுவிட்டு, அவனே பார்த்துக் கொள்வான். எல்லாமே அவன் நடத்தும் நாடகங்கள்தான். எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று சொல்லிக்கொண்டு சும்மா இருந்துவிட்டால் வாழ்க்கையின் முடிவு என்னாகும். நாம் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்களை, செய்திகளை, தகவல்களை இறைவனா வந்து தெரியப்படுத்துவார்?
நாம் எப்படி வாழவேண்டும், எப்படி உழைக்க வேண்டும், எப்படி கார்யங்களை ஆற்ற வேண்டும், எப்படி முன்னேற வேண்டும், எப்படி இந்த பூமியை. சிறப்புடையதாக்கி'. மற்றவரையும் சிறப்படைய வைக்க வேண்டும். என்றெல்லாம் சொல்லிக் கொடுப்பாரா? இறைவன் அதற்குத்தான் இருக்கானா? இவற்றையெல்லாம் இறைவன்தான் மனிதனுக்குச் செய்துகொண்டிருக்க வேண்டுமென்றால் மனிதனுக்கு ஆற்றல் மிக்க மனம் என்ற ஒன்று எதற்கு?
மனிதனுக்கு வேண்டிய அனைத்தும் இறைவனே கொடுப்பார் என்றால் ஆற்றல் மனம் மிக்க மனிதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படிப்பட்டவன் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே மேல்.
மனிதனின் ஆறாவது உணர்வான ஆற்றல் மிக்க மனதை மனிதனிடம் இருந்து எடுத்துவிட்டால் ஐந்து உணர்வுதான் மிஞ்சும். அந்நிலையில் மனிதனும் மிருகமும் ஒன்றாகி விடுவார்கள். இறைவன் மனிதனை மிருகங்களோடு மிருகங்களாக இன்னும் ஓர் இனமிருகமாகவே படைத்து விட்டிருக்கலாமே. கற்பனை செய்யுங்கள்.
அப்படி ஒர் நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்.இறைவன் மனிதனை உயர்த்திஆறுஅறிவு கொடுத்தும் உள்ளான். அத்தகைய பொறுப்பைத் கொண்டிருக்கும் மனிதன் தனக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையின் பேற்றையும் பெருமையையும், அருமையை மும் அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டும்.
மிருகங்களுக்கும் கூட இறைவன் எந்த ஒரு காரியத்தையும் செய்து கொடுக்க வில்லையே. ஒவ்வொரு மிருகங்களும்,பறவைகளும் அதனதன் தேவைகளை அவைகளே நிறைவேற்றக் கொள்ள ஆற்றலைத்தான் படைத்திருக்கிறார். அப்படியிருக்க மனிதன் இறைவனிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறான்?. ஒவ்வொரு ஜீவரசசிகளை அதனதன் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்ய இறைவன் கொடுத்த ஆற்றலைக் கொண்டு ஜீவித்தும் மடிந்தும் போய்க்கொண்டிருக்கின்றன.
ஆனால் ஆறாவது உணர்வு கொண்ட மனிதன் தனக்கு வேண்டியதையும் அடையக்கூடிய ஆக்கபூர்வமான ஆற்றல்களை இறைவன் கொடுத்திருக்கும்போது அதை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாமல் இறைவனிடம் "எனக்கு அதை கொடுங்கள். இதைக். கொடுங்கள். அந்த கார்யம் செய்யுங்கள். இந்த கார்யம் செய்யுங்கள்" என்று இறைவனையே ப்ரார்த்திருப்போம்.
இறைவனே தன்னைத் தேடிவந்து தனக்கு செய்து கொடுக்க வேண்டும் என எதிர்பார்த்து அவனை தொல்லைபடுத்துவதே மனிதனின் செயலாகிவிட்டது. மனிதனுக்கு பூரணமாக அவன் எல்லாம் தந்து விட்டானே. அதற்காகவே இறைவனுக்கும் கோடானு கோடி நன்றி சொல்லவேண்டும்.
அப்படி நன்றி சொல்வதோடு நாம் முழுமையாக வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்பதுதானே நியாயம். இறைவன் மனிதனுக்கு பிரதிபலன் செய்ய வேண்டியதில்ல. மனிதன்தான் இறைவனுக்கு பிரதிபலன் செய்யவேண்டும். மனிதனுக்கு அளவிடமுடியாத பேறுகளை இறைவன் வாரி வழங்கி இருக்கிறான். அதனால் மனிதன்தான் இறைவனுக்கும் கொடுக்க வேண்டும். அவற்றில் முதலாவதாக இறைவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இறைவனையும் மனதோடு வணங்கி போற்றித் துதிக்க வேண்டும். அடுத்து தானும் வாழ்ந்து ,வாழவிட்டு, வாழ்ந்திட வகை செய்திட வேண்டும். இதுவே மனிதனின் சிறந்த விழிப்புணர்வு ஆகும்.