
உங்களுக்குத் தெரியாமலேயே உங்களிடம் பல வளங்கள் மறைந்து இருக்கும். கூர்ந்து நோக்கினால்தான் அவை தெரியவரும். உங்கள் அறிவு, வசதி, தொழில் நுட்பம் நேரம், நட்பு, உறவு, திறமைகள் அனைத்தும் உங்களை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லக்கூடிய வளங்கள்.
வளங்களைத் தெரிந்து கொள்ளுதல்
வளங்கள் குறித்த அறிவு இருக்கும் போதுதான் அவ்வளங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியும்.
வளங்களைப் பயன்படுத்தி திட்டமிடல்
எந்த வளத்தை, எப்போது யார் பயன்படுத்தலாம் என்பது குறித்த தெளிவான திட்டமிடல் அவசியம். தொழில் நுட்பத் திறன் குன்றியவர்களிடம் இருக்கும் மதிப்புமிக்க தொழில்நுட்ப சாதனத்தினால் எந்தப் பயனும் கிடைப்பதில்லை.
வளங்களை புதுப்பித்தல் குறித்து திட்டமிடல்
வளங்களைப் பயன்படுத்தும்போது அது சேதப்படலாம். அல்லது பலன் குன்றாமல். போதிய இடைவெளியில், தேவைக்கேற்ப இருக்கும் வளங்களப் புதுப்பிக்கவும், சரி செய்யவும் திட்டமிடல் அவசியம்.
கொள்முதல் திட்டம்
ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது புதிய வளங்கள் தேவைப்படலாம். அவ்வளங்களை சரியான தருணத்தில், சரியான இடத்திலிருந்து கொள்முதல் செய்ய திட்டமிட வேண்டும்.
வளங்கள் ஒதுக்கீடு குறித்து திட்டம்
மொத்த இலக்கைக் கணக்கிட்டு இருக்கும் வளங்களை யாருக்கு எவ்வளவு தரவேண்டும் என திட்டமிடல், வளமேலாண்மையில் ஒரு முக்கியப் படியாகும். இந்த ஒதுக்கீடு சூழலுக்கேற்ப மாற்றியமைக்கப் கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் வளங்களின் ஒதுக்கீடு குறித்து விவரங்களை அனைத்து பணியாளர்களும் அறிந்திருத்தல் அவசியம்.
போதிய இடைவெளியில் மதிப்பீடு செய்தல்
வளங்களைப் பயன்படுத்தும் முறையைப் போதிய இடைவெளியில் மதிப்பீடு செய்தல் அவ்வளங்கள் விரயமாவதைத் தடுக்கும்.
உங்கள் இலக்கை நோக்கிய பயணத்தில் உங்களின் அனைத்து வளங்களும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க அவற்றை தகுந்த முறையில் உபயோகிக்க திட்டமிடல் அவசியம். எல்லா வளங்களையும் தகுந்த முறையில் பயன்படுத்தும்போதுதான் வெற்றியை நோக்கிய பயணம் எதிர்பார்த்த பலனைத்தரும்.