
தோல்வியைத் துரத்தாதீர்கள். தோல்வியை ருசியுங்கள். எந்த அளவுக்குத் தோல்வியை ருசிக்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கை படிக்கத்தக்க புத்தகம் ஆகும்.
புகழ் பெற்ற எழுத்தாளர் பெஞ்சமின் ஃப்ராங்க்லிங் தோல்வியை எப்படி ருசித்தார் தெரியுமா?. அவரது தந்தைக்கு இரண்டு மனைவிகள். 17 குழந்தைகள். 8 வயதில் பெஞ்சமினை பள்ளியில் சேர்த்தார்கள். கணிதம் அவருக்கு வேப்பங்காயாய் கசந்தது. 12 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு அண்ணன் நடத்திய அச்சகத்தில் எடுபிடி வேலை செய்தார். அச்சகத்தில் கையில் கிடைத்த பேப்பர் எல்லாம் எழுத்து விடாமல் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்ட அங்குள்ள துறைமுகத்துக்குச் செல்வார்.
கப்பலில் இருந்து இறங்கும் பயணிகள் மாலுமிகளிடம் படித்து முடித்த புத்தகங்களை. தாருங்கள் என்று கெஞ்சி கேட்டு வாங்குவார். புரியாவிட்டாலும் தொடர்ந்து வாசிப்பார். இந்தக் காலக்கட்டத்தில் பாஸ்டன் நகரிலிருந்து இரண்டே இரண்டு நாளிதழ்கள் மட்டுமே வந்தன. அதைப் பார்த்ததும் பெஞ்சமின் அண்ணனுக்கு உள்ளூர் செய்திகளை வெளியிட ஆசை வந்தது. தம்பி பெஞ்சமின் அண்ணன் நடத்தும் பத்திரிகையில் ஏழுத ஆசைப்பட்டார்.
ஆனால் அவரோ தம்பி படிப்பை பாதியில் விட்டதால் முட்டாளே தூரப்போ என்று விரட்டுவார். பெஞ்சமின் புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதி அண்ணனின் அச்சகத்தில் கதவு ஓரத்தில் வைத்துவிடுவார்.
அதைப் படித்துப் பார்த்த அண்ணன் சூப்பராக இருக்கிறதே என்று பிரசுரித்தார். பெஞ்சமின் முகம் தெரியாத கட்டுரைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஒருநாள் அத்தகைய சிறப்புக் கட்டுரைகள் எழுதியது தன் தம்பிதான் என்று தெரியவருகிறது அண்ணனுக்கு. பெஞ்சமினை அழைத்ததும் பாராட்டுவார் என நினைத்தவருக்கு அடியும் திட்டும்தான் கிடைத்தது. காயங்களோடு தப்பி ஓட நினைத்தார். அப்பாவிடம் முறையிட 17 குழந்தைகள் இருந்ததால் நீயாச்சு அண்ணனாச்சு அவரவர் வாழ்க்கையை அவரை முடிவு செய்யுங்கள் என்றுகூறி நழுவிவிட்டார்.
நடுத்தெருவில் விடப்பட்ட பெஞ்சமின் பிலடெல்பியா நகருக்குச் சென்றார். தன் தோல்விகளால் கிடைத்த அனுபவத்தில் வெற்றிக்கு குணாதிசயங்கள் வகுத்தார்.
தேவைப்படும்போது மட்டும் பேசுதல்
தேவைக்கு மட்டும் உணவருந்தும்
ஒழுங்காக காரியம் செய்தல்
சிக்கனம் கடைபிடித்தால்
பதற்றமின்றி செயல்படுதல்
ஒழுக்கமாக வாழ்தல்
அடக்கமாக வாழ்தல்
இப்படி பல குணங்களை வரிசைபடுத்தி அப்படியே வாழ்ந்து காட்டட அச்சகத் தொழிலில் சாதித்து, புதுமைகளை பல புகுத்தி பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விற்பனையான poor ரிச்சர்ட்ஸ் Almanac என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.
பணம் குவிந்தது. புகழ் நிறைந்தது. மனைவி மக்கள் என வாழ்க்கை நன்றாக அமைந்தது. அத்தோடு நின்றுவிடாமல் கிடைத்த செல்வத்தில் மக்களுக்கு மருத்துவமனை, கல்வி நிறுவனம், என்று பலவற்றை நிறுவினார். 1750 ம் ஆண்டுகளில் அமெரிக்கா இங்கிலாந்திடம் அடிமைப்பட்டு கிடந்தது. விடுதலை பெற பெஞ்சமின் வீர முழக்கமிட்டார். விடுதலையும் கிடைத்தது. தோல்விகளை ருசித்து வெற்றியை நிலை நாட்டினார் பெஞ்சமின் பிராங்க்லிங்.