வாழ்க்கையின் அஸ்திவாரம்: திட்டமிடுதலும் நல்லொழுக்கங்களும்!
வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம், என்ற நோக்கமே தவறானது. அது நல்ல வழிமுறையல்ல.
இப்படித்தான் வாழவேண்டும் என ஒரு நியதியை கடைபிடித்து வாழ்வதுதான் வாழ்க்கை.
அதேபோல சரியான திட்டமிடுதலும் கடைபிடிக்க வேண்டும்.
திட்டமிடாத எந்த காாியமும் சரிவர நிறைவேறியதாக தொியவில்லை. நமக்கே உடல் நலம் சரியில்லை என வைத்துக்கொள்வோம், மருத்துவர் மூன்று வேளைக்கு மருந்து மாத்திரை கொடுத்துள்ளாா், அதை வேளாவேளைக்கு போட்டுக்கொள்ளவேண்டும். காலை மாத்திரையை இரவு நேரத்திலும் இரவு எடுத்துக் கொள்ளவேண்டிய மாத்திரையை காலையிலும் போட்டுக்கொள்வது எவ்வளவு அபத்தமான செயல்.
அதே போலத்தான் திட்டமிடாமல் செய்யும் எந்த செயலும் பரிபூா்ணமாய் முடிவதில்லை. அதற்குத்தான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைபாடுகளை தவிா்க்கவேண்டும். அதுதான் நல்ல வாழ்க்கைக்கான அஸ்திவாரம். அப்போதுதான் நமது லட்சியத்தை அடையமுடியும்.
இதனை ஒட்டியே காந்தி அடிகள் தனது கூற்றாக சொல்லியுள்ளதை பாருங்கள் "ஒரு நல்ல லட்சியத்தை அடையவேண்டுமானால் நல்ல வழிமுறையைக் கையாளவேண்டும்" என தொிவித்திருக்கிறாா்.
அதன்படி லட்சியம் நிறைவேற நல்ல வழிமுறையும் தேவை.
நல்ல வழிமுறைகளாவன சரியாக திட்டமிடுதல், உயர்வான எண்ணம், செய்யும் தொழிலில் நோ்மை, பேசும் பேச்சில் தெளிவு, பாா்க்கும் பாா்வையில் பகைமை தவிா்த்தல், மனசாட்சி தவறாமை, தெளிவான சிந்தனை, அடுத்துக்கெடுக்காமை, புறம்பேசாமை, பொய்சொல்லாமை, சத்தியம் தவறாமை, இறை நம்பிக்கை குறைக்காமலும் வாழ்வதே சிறப்பானதாகும்.
இவைகளோடு நல்ல தெளிவான உயர்ந்த எண்ணங்களுடன், பொியோா் சொல் மதித்து கவனச்சிதறல் இல்லாமல், எடுத்த காாியத்தை திறம்பட முடித்து, நாம் கொண்ட லட்சியம் மாறாமல், வாழ்ந்து வந்தாலே வாழ்க்கை நம் வசமாகிவிடுமே!
ஆக, லட்சியம் கடைபிடித்து வாழ்வதே லட்சணமாகும். லட்சியம் தவறில் அது லட்சணமல்ல அவலட்சணமாகும். என்பதை உணர்ந்து வாழ்வதே நல்லது!

