

ஒருமுறை கடலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது கடலை பார்த்திராத ஒரு சிறுவன், கடல் என்றால் எப்படி இருக்கும் ? என்று கேட்டான்.
மிகப்பெரியதாக இருக்கும். அதை யாராலும் நீந்தி கடக்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட பெரிய நிலப்பரப்பை உடையது கடல் என்று கூறினோம். அதற்கு அவன் பட்டென்று" எங்கள் ஆசிரியராலும் கூடவா நீந்தி கடக்க முடியாது?!" என்று ஆச்சரியம் பொங்கக் கேட்டான்.
ஆசிரியர்கள் அந்த விதையை நம்பிக்கையோடு பரப்பித்திருந்தார்கள் மாணவர்களிடத்தில். இந்த நம்பிக்கைதான் ஒவ்வொரு மாணவ, மாணவனிடத்திலும் தன்னம்பிக்கை வளர வழி செய்திருந்தது.
இதற்கொத்த ஒரு குட்டிக் கதையைப் பார்ப்போமா?.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மாவீரன் நெப்போலியனிடம் "உங்கள் படையில் எத்தனை பேர் இருக்கிறார்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அவர் "என்னைச் சேர்க்காமல் 50 ஆயிரம் பேர்" என்றார். அப்படி என்றால் உங்களை சேர்த்து எத்தனை பேர் என்று கேட்டார்கள். அதற்கு அவர் "ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்" என்று பதில் கூறினார். இத்தகைய தன்னம்பிக்கை நமக்கும் வரவேண்டும்.
உங்களின் தன்னம்பிக்கையே உங்களை வெற்றி இலக்குக்கு அழைத்துச் செல்லும் பாதை என்பதை மனதில் பதியுங்கள்.
எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வழிகாட்டியாகும்.
-இந்திராணி தங்கவேல்