
ஒருவர் நமக்கு தீங்கு செய்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நான் அடித்தே தீருவேன். உழைப்பை திருடுவேன் என்று யார் ஒருவர் அந்த எண்ணத்தில் எப்படியாவது எதிரிக்கு குழி தோண்டி ஆகவேண்டும் அதில் அவரை தள்ளிவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டார் கடைசியில் அந்த குழுவில் விழப்போவது என்னவோ நாம்தான்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. நமக்கு எதிரியாக இருப்பவர் என்ன குணாதிசயத்தில் இருந்தாலும் சரி அதைப்பற்றி நீங்கள் கவலைப் படாதீர்கள். நீங்கள் சரியாக செயல்படுங்கள். அதுவே உங்கள் வாழ்க்கையை உயர்த்தும். என்பதற்கான ஒரு குட்டி கதைதான் இப்பதிவில்.
நல்ல நண்பர்களாக ஒரு எலி குட்டியும், தவளையும் இருந்தன. சில நாட்களின் எலி குட்டியின் குணநலன்கள் தவளைக்கு பிடிக்காமல் போய்விட்டது. தினம் காலை எலிக்குட்டியை பார்க்க குளத்தில் இருந்து வெளியே வரும் தவளை. ஆனால், ஒரு மரத்தின் உள்ளே ஒரு துளைக்குள் வாழ்ந்த எலிகுட்டி, தவளையை சந்திக்க வராமல் இருந்தது. தன்னை எலிகுட்டி மதிக்கவில்லை என விரோதத்தை வளர்த்த தவளை, எலிக்குட்டியின் மீது விரோதத்தை வளர்த்தது.
இதன் காரணமாக, தவளை எலி குட்டியை தண்டிக்க திட்டமிட்டது. ஒரு நாள் காலை நேரத்தில், எலிகுட்டியை தவளை பார்க்கும் பொழுது, ஒரு கயிறை எடுத்து, அதன் ஒரு முனையை தன் காலுக்கும் மற்றொரு முறையை எலி குட்டியின் வாலுக்கும் கட்டியது.
தவளை துள்ளி குதித்து, எலி குட்டியை இழுத்துக்கொண்டு, நீருக்குள் நீந்தியது. எலி குட்டி தன்னை விடுவிக்க முடியாமல், நீரில் மூழ்கி இறந்துவிட்டது. தவளையானது வெற்றி பெற்ற முனைப்பில் சிரிக்க, எலி குட்டியின் உடலோ, தண்ணீரின் மேல் மிதந்தது.
குளத்தின் மேல், கடந்து செல்ல இருந்த பருந்து ஒன்று நீரின் மேல் மிதந்த எலி குட்டியை கவனித்து, கீழே வந்து எலி குட்டியை தன் அலகால் கவ்வியது. இதனை பார்த்த தவளை தன் காலில் எலி குட்டியுடன் சேர்த்து கட்டப்பட்ட கயிறு இன்னும் கழட்டப்படாமல் உள்ளதை உணர்ந்தது.
தவளையும் எலி குட்டியுடன் பருந்திற்கு இரையானது.
எதிரியின் குணநலன் என்னவாக இருந்தாலும், அவருக்கு ஆழமான குழிதோண்ட நினைத்தால் நாமும் அந்த குழியில் விழவேண்டியதுதான்."