உதாரணமாக இருங்கள்!

motivation articles
motivation articlesImage credit - pixabay.com

பிறர் செய்யட்டும் என்று எதிர்பார்ப்பதை விட, முடிந்தால் நாமே செய்து பழகிக்கொண்டால் தன்னம்பிக்கை (self confidence) அதிகரிக்கும். நன்மைகளும் கிட்டும்.

எடுத்த பொருட்களை வேலை முடிந்ததும், முதல் காரியமாக எடுத்த இடத்திலேயே கட்டாயம் மறக்காமல் வைக்க பழகிக்கொள்ளுங்கள்.

அடுத்தமுறை தேடி கண்டுபிடிக்க நேரம் விரயம் செய்ய வேண்டாம். டென்ஷன் அதிகரித்துக் கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

டைனிங் டேபிள் மீது அனாவசியமான பொருட்கள், துணிகள் வைத்து நிரப்புவதை தவிர்க்க பழகிக் கொள்ளுங்கள். டைனிங் டேபிள் இவைகளுக்கான சுமை தாங்கியில்லை என்று புரிந்துக் கொள்ளுங்கள்.

அந்த காலத்திய வாழ்க்கை நடைமுறை, இன்றைய வேகம் எடுத்துள்ள வாழ்க்கை முறையோடு சேர்ந்து பயணிக்காது. எனவே காலத்திற்கு ஏற்ப, கூடிய மட்டும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு வாழப்பழகுங்கள்.

வளரும் தலை முறையினரின் யோசனைகளை மனம் கொண்டு கேளுங்கள். இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களால் சிந்திக்கவும், செயல்படவும் முடியும் என்பதற்கு உரிய அங்கிகாரம் அளிக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுடைய இந்த செயல், அடுத்த தலை முறையினரை மேலும் சிந்தித்து உபயோகமாக செயல்பட தூண்டும். உங்களது சரியான நேரத்து பாராட்டுதல்கள் அங்கீகாரங்கள் அவர்களுக்கு உந்து சக்தியாக (timely motivational energy) திகழும்.

அவர்களது சிறிய செயலாக இருந்தாலும், உதாசீனப்படுத்தாமல் தயங்காமல் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள். அப்படி பழகுங்கள்.

எதிர் வரும் ரிசல்ட்டுக்கள் உங்களை வியக்க வைக்கும்.

பிறரிடமிருந்து வயது வித்தியாசம் இல்லாமல் தெரியாததை, தெரிந்து கொள்ள பழகுங்கள். அவர்களுக்கு உரிய நன்றி கூறுவதையும் பழகி பின்பற்றுங்கள்.

இதையும் படியுங்கள்:
‘ஹைலுரானிக் ஆசிட் ஆசிட் சீரம்’ பற்றிய முழுமையான தகவல்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க!
motivation articles

பிறர் கூறும்பொழுது இடை மறிக்காமல் கேட்க பழகிக் கொள்ளுங்கள். புரியாவிட்டால், மேலும் விவரம் தேவை என்றால், பணிவோடு கேட்டு அறிந்து கொள்ள தயங்காமல் பழகிக் கொள்ளுங்கள்.

அடுத்தவர்கள், அடுத்த தலைமுறையினர் உங்களை தயக்கம் இன்றி அனுகும்படி வைத்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.

இன்முகத்துடன் உரையாட பழகுங்கள்.

பிறர் முன்னேற, உங்களால் முடிந்த உதவிகளை மகிழ்வுடன் செய்ய பழகிக் கொள்ளுங்கள்.

இத்தகைய பழக்கங்கள் உங்களுக்கு மனநிறைவை கட்டாயம் அளிக்கும். பிறர் உங்களை உதாரணமாக கொண்டு செயல்பட்டு உபயோகம் பெறவும் உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com