எண்ணம் போல் வாழ்க்கை!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com

 Think positive. good things happen! 

ல்லதே நடக்கும் என்று எப்போதும் எச்சூழலிலும் நினைத்துக் கொண்டு இருந்தால் கண்டிப்பாக நல்லது நடக்கும். சிலரின் பாசிட்டிவ் அப்ரோச் வியக்க வைக்கும். உடல்நலக்குறைவு ஆகட்டும் பணக்கஷ்டம் அல்லது வீட்டில் ஏதோ சண்டை எதுவாக இருந்தாலும் அது சரியாகி விடும். மேலும் மேலும் அது பற்றி பேசாமல் மௌனமாக இருந்தாலும் தானே அந்த ப்ரச்சனை காணாமல் போய் விடும் என்பார்கள். உண்மை.

எப்போதும் வாழ்க்கை ஒரே போல் இருப்பதில்லை‌‌. சில சமயங்களில் சின்ன சின்ன விஷயங்கள் பூதாகரமாக தெரியும். கோபம் வரும். அப்போது கடும் சொற்கள் பேசாமல் இருக்க வேண்டும். முடிந்த வரை இனிமையாக பேசுவது நலம்‌. முடியவில்லயா? மௌனமாக இருப்பது உத்தமம். சில சமயம் பெரிய விஷயங்கள் சிறியதாக தெரியும் ‌அதற்கு காரணம் நம் மனது மட்டும்தான்.

இனிய உறவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று

பேச இனிய சொற்கள் இருக்கும் பொழுது பேசாமல் கடும் சொற்கள் பேசுவது கனிகள் இருக்கும் பொழுது அதை உண்ணாமல் காய்களை உண்வது போன்றது என்கிறது திருக்குறள்.

இதையும் படியுங்கள்:
இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!
Motivation Image

ஒரு குழந்தையிடம் சூரியனையும் பூவையும் வரையச் சொன்னால் சிரிப்பது போல் வரைந்திருக்கிறாயே என்று கேட்டதற்கு "சிரித்து பேசினால் அழகாக இருக்கும். நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.

சூரியன் சிரித்தால் எப்படி இருக்கும்? பூ சிரித்தால் எப்படி இருக்கும் என்று வரைந்து பார்த்தேன் என்றானாம். என்ன ஓர் உணர்வுபூர்வமான உதாரணம். பாசிட்டிவ் ஆகவும் முடிந்த வரை பிறர் மனது நோகாமல் பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம். நாமும் பின்பற்றுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com