வாழ்க்கை என்பது ஒரு வட்டம்
இறைவன் வகுத்த சக்கர வியூகம்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்
இப்படித்தான் வாழ்வது நியதி;
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்
என்பது அவரவர் மனோவியாதி.
மரணம் நிச்சயம் மானுடா
மரணம் நிச்சயம்.
தகுதியை உணர்ந்து வாழ்வதே மேல்
தகுதிக்கு மீறய செயல் சங்கடமே!
உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன்
பாகுபாடெல்லாம் இடுகாட்டில் இல்லை
அந்த வித்யாசம் உனை சுமந்துவரும் ஊா்தியால்தான் நிா்ணயம்!
எதை கொண்டுவந்தாயோ? தொியாது
வாழ்வாங்கு வாழ்ந்தாயா தெரியுமா? தொியும்!
இறுதி ஊா்வலத்தில் வந்தவர்கள் யாா் யாா் தொியுமா ?
எதை அணிந்து சென்றாய் தொியுமா ? தொியாது - காரணம்
நீ இப்போது மனிதனல்ல பிரேதம் !
வாழும்போது ஏன் இவ்வளவு வஞ்சகம் ?
ஏன் இவ்வளவு ஆணவம் குரோதம்?
அதோடு அளவிடமுடியா விரோதம்!
பொியவர்களை மதிக்கக் கற்றுக்கொண்டாயா?
நான் என்ற அகம்பாவம் தொலைத்தாயா?
மரணம் வரும், நிச்சயம் வரும் என தொிந்தும்
ஏன் இந்த ஆட்டம்
எதற்கும் உண்டே அளவுகோல்
மனிதநேயம் கடைபிடி
இறைவழி நாடு, ஏழைக்கு உதவிடு
பொியவர்களை மதித்து நட
மிதித்து நடவாதே!!
அன்பெனும் நல்விதையை நட்டுப்பாா்
பண்பாடு கடைபிடி
நல் ஒழுக்கம் தவறாதே
அடுத்தவரை ஏமாற்றாதே
தாய்தந்தையை கடைசிவரை கவனி
முதியோா் இல்லம் தவிா்
தாய்க்குப்பின் தாரம் என்ற நியதி மறவாதே
அன்னதானம் செய்
தகுதிக்கு மீறியசெலவுகளை செய்யாதே
ஜீவராசிகளை துண்புறுத்தாதே
அந்திம சடங்கிற்கு பணம் சேமித்தல் நல்லதே
வரம்பு மீறாதே
இறைவன் கொடுத்த வாழ்வில்
நோ்கொண்டபாா்வையோடு நடமாடு
அதுவே கடவுள் கொடுத்த வரம்!