கவிதை - தீதும் நன்றும் பிறர் தர வாரா!

Motivation Image
Motivation Imagepixabay.com

-செ. கலைவாணி, மெல்போர்ன்.

ம் எண்ணமே

நம் செயலாம்.

எண்ணம் வலிமையானால்

ஏற்றம்

வந்திடும்.

எதை எறிகிறோமோ

அதையே பெறுவோம்.

நல்வினை ஆற்றிட

நலமே விளையும்

அல்லதைச் செய்திட

அல்லவை நடக்கும்.

வித்தொன்று நட்டால்

விளையும் அச்செடி

விதையின் செடியாய்

விரைந்து முளைக்கும்.

நேர்மறை எண்ணத்தால்

நேர்மையாய் வாழலாம்.

எதிர்மறை எண்ணம்

ஏமாற்றத்தைத் தரும்.

வருந்தி நொந்திட

வலிமை அகலும்.

எண்ணம் போல்தான்

திண்ணமாய் வாழ்வோம்.

நம்மனம் நலிய

நம்முடல் நலியும்.

எதுவும் கடந்து

ஏகும் என்று

மனதில் நினைக்க

மனம் அமைதியாகும்.

மல்லாந்து படுத்து

எச்சில் உமிழ

படுத்தவர் மேலே

பாய்ந்தே விழும்.

இதையும் படியுங்கள்:
வளரும் இமயமலை.. எப்படி சாத்தியம்?
Motivation Image

எதிராளியை வீழ்த்த

எண்ணும் போது

உனக்கே குழிபறிக்கிறாய்

உன்னையே

வீழ்த்துகிறாய்.

மனம் மகிழ்ந்திட

தினமும் அமைதியாயிரு.

நல்லதை நினை

நல்லதே நடக்கும்.

உன் மகிழ்ச்சி

உன் கையில்.

உன் முயற்சியே

உனக்கு வெற்றி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com