நீங்கள் செய்வதை சந்தோஷமாக செய்தால் வெற்றி உங்களைத் தாவி வரும்!

If you do it happily, success will overtake you!
Success article
Published on

சிலர் குறுக்கு வழியில் வெற்றி பெற துடிப்பார்கள். ஆசைபட்டது உடனே கிடைத்துவிடவேண்டும் என்பதற்காகவே இந்த சிந்தனை ஏற்படுகிறது.  உலகத்தைக் சுற்றிவர ஆசைப்பட்டு காரை எடுக்கிறீர்கள்.  பெட்ரோல் இருக்கும் அளவுக்குத்தானே வாகனம் போகும்.  பெட்ரோல் தீர்ந்துவிட்டால் வண்டி நின்றுவிடும் அல்லவா? அப்படித்தான் உங்கள் ஆசையும்.  உங்களிடம் திறமை எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் ஆசைப்பட்டதை அடைய முடியும்

வெற்றியை எதற்காக விரும்புகிறீர்கள்? அது உற்சாகம் தரும் என்றுதானே?. கூடவே உற்சாகத்தை வெற்றி கிடைப்பதற்கு  ஆசைப்பட்டதை அடையத் தேர்ந்தெடுக்கும்  பாதையையும் உற்சாகமாக  அமைந்துவிட்டால், வெற்றியின்  உற்சாகத்தை வெற்றி கிடைப்பதற்கு முன்பாகவே அனுபவிக்கலாம் அல்லவா?.குறுக்கு வழியில் ஆசைப்பட்டு அதை ஏன் இழக்கப் பார்க்கிறீர்கள்?

தென்னங்கன்றை நட்டு விட்டு, அதன் கீழே உட்கார்ந்து தேங்காய், தேங்காய் என்று கூப்பாடு போட்டால், தேங்காய் விழுமா?. அது வளர்வதற்கு தேவையானவற்றையெல்லாம் குறைவில்லாமல் வழங்கிப் பாருங்கள்.  மரம் செழிப்பாக வளர்ந்து தேங்காய் கொத்து கொத்தாகக் காய்க்கும்.

ஒருவர் தன் வீட்டிலிருந்த பூனைக்குட்டியை இழுத்து வந்து சாரட் வண்டியில் பூட்டினார்.  இழு, இழு என்று பூனைக்குட்டியை மிரட்டினார்.  சாட்டையால் விளாசினார். அக்கம்பக்கத்தினர்கள் "என்ன மடத்தனம் இது உங்கள் குதிரையை இதற்கு பயன்படுத்தலாமே என்று அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் "பூனை இருக்கும்போது குதிரை எதற்கு என்று குதிரையை விற்று விட்டேன். குதிரையை அடிப்பதற்கு பயன்படுத்தும் சாட்டைதானே இது" என்றாராம்.

இதையும் படியுங்கள்:
குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!
If you do it happily, success will overtake you!

முழுத் திறமையையும் காட்டினால்தான் மட்டுமே வெற்றி பெறக்கூடிய விஷயங்களை குறுக்கு வழியில் அடைய விரும்புவது சாரட் வண்டியில் பூனையை பூட்டி இழுப்பது போல்தான். வெற்றியின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் குறுக்கு வழியில் வெற்றிக்கு ஆசைப்படுகிறார்கள். மலை முகட்டை நோக்கி பயணம் செய்யும்போது  உங்கள் அடுத்த அடி கல்மீது பதிகிறதா, பள்ளத்தில்  பதிகிறதா என்று கவனிப்பீர்களா? அல்லது மலை உச்சியை மட்டும் அண்ணாந்து பார்த்துக் கொண்டு போவீர்களா?

மெத்தென்ற புல், சலசலக்கும் நீரோடை, பாதையின் இருபுறமும் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள், இப்படி நீங்கள் போகும் பாதையில் சந்தோஷப்பட ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன. எங்கேயோ தூரத்தில் இருக்கும் முகட்டை மாற்றும் கவனித்துக் பயணம் செய்தால் நூறடி போவதற்குள் களைத்துவிடுவீர்கள்.

அதேபோல் செய்யும் செயலை ஆனந்தமாகச் செய்யாமல் வெற்றியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு செய்தாலும் போராட்டம்தான். திறமையை வளர்த்துக்கொண்டு செய்வதை சந்தோஷமாகப் செய்தால் வெற்றி உங்களைத் தாவிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com