அரைகிலோ அழுகின தக்காளி, அரை கிலோ முற்றின வெண்டைக்காய், காய்ந்த கறிவேப்பிலை, அழுகின வெங்காயம் அரைகிலோ என்று காய்கறி கடையில் எட்டு வயது சிறுவன் கேட்டான். இப்படிக் கேட்டதும் திடுக்கிட்டார் கடைக்காரர். இப்படி வாங்கிட்டுப் போனா உன்னை வீட்டில் திட்டமாட்டாங்களா என்றார். அதற்கு அவன் "அதைப் பற்றிக் கவலையில்லை. அடுத்த தடவை என்னை அனுப்ப மாட்டாங்க" என்று சொன்னபடி ஓடிவிட்டான்.
நான் ஒரு வினாடி கூட பயனின்றி கழிக்க விரும்ப வில்லை. பொழுது போக்கு, பயனற்ற வாழ்க்கை இவற்றை எதிர்த்து கடுமையாக உழைத்தேன். திடீரென விழிப்புணர்வு ஏற்பட்டு என்னைச் சுற்றியுள்ளவர்களை நோக்கினேன். என் நிழலில் பாதுகாப்பாக இருப்பதால் அவர்கள் வளரவே இல்லை. என்னைப் பற்றிக் கவலைப்படாமல் என்னை கசக்கிக் பிழிந்து தங்கள் தேவைகளை நிறைவைற்றுவதைப் பார்த்த பிறகுதான் எனக்கு உறைக்கத் தொடங்கியது" என்று ஓஷோ கூறினார்.
கடுமையாக ஊழைப்பவர்களை எல்லோரும் வேலை வாங்குவார்கள். இந்த உலகம் சுயநலமானது. நம் சந்தோஷம், மகிழ்ச்சி, எல்லாவற்றையும் இழந்து உலகுக்கு உபயோகப்படுவது புத்திசாலித்தனமா என அதிகம் உழைப்பவர்கள் யோசிக்க வேண்டும். இயற்கை நமக்கு பாடங்கள் தருகிறது. நாம் உபயோகிக்கும் பூமி சிறியது. ஆகாயமோ பெரிது. இத்தனை கோடி நட்சத்திரங்களால் என்ன நன்மை விளைந்துள்ளது.
உழைப்பவர்கள் உ.ழைத்துக் கொண்டே இருக்க வேண்டுமா. தூங்க வேண்டாமா? அப்போதுதான் மறுநாள் உழைக்க சக்தி சேகரமாகும். எனவே உபயோகமற்ற செயல்களும் உபயோகமானவையே.
சீன தத்துவ ஞானியிடம் ஒருவர் "உங்கள் அனைத்து உபதேசங்கள் பயனற்றவைகளையே மையம் கொண்டுள்ளது" என்று குற்றம் சாட்டினார்.
ஆதற்கு அவர் "பயனற்றவைகளை உள் வாங்கும் தன்மை உங்களிடம் இல்லாதபோது பயனுள்ளவைகளையும் நீங்களா உணர முடியாது. பூமியில் மனிதன் பயன்படுத்தும் பரப்பளவு சிறியது. சில அங்குலங்கள் மீதுதான் மனிதனால் நிற்க முடியும். அவன் பயன்படுத்தாத இடங்களை நீக்க வேண்டுமென்றால் வளைகுடாப் பிளவில்தான் அவன் நிற்க முடியும். அவன் வெறுமையில் சூன்யத்தில்தான் நிற்பான். அவன் பயன்படுத்திக் கொண்டிருப்பதையே எவ்வளவு காலம் அவன் பயன்படுத்த முடியும்" என்றார்.
நம்மைச் சுற்றி கிடுகிடு பள்ளம் இருந்தால் வாழ முடியுமா? பயனற்றவையும் சேர்ந்துதான் வாழ்க்கையை முழுமைப் ஆக்குகிறது. நம் வீடு என்பது என்ன? ஒன்று சுவர்கள், பொருட்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியைவை. வீட்டின் மற்றொரு இடம் வெற்றிடம், வாசல், ஜன்னல் போன்ற வெறுமை. வீடு முழுவதும் சுவர்களாலும், பொருட்களாலும் நிரம்பி,காலியிடமே இல்லாதிருந்தால், நீங்கள் அதில் வாழ முடியுமா?. அதிகம் பயனுள்ள மனிதர்கள் காலியிடம் இல்லாத வீடுகள். அவர்கள் மூச்சுத்திணறலை உணர்கிறார்கள். ஓயாமல் உழைக்க விரும்புகிற உபயோகமான மனிதர்களாக மட்டும் வாழ்பவர்கள் கொஞ்சம் பயனற்ற மனிதராகவும் இருங்கள். சந்தோஷத்தின் ஜன்னல் திறக்கும்.