

இன்று இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமஉரிமை இருக்கிறது. ஆனால், 160 வருடத்திற்கு முன்பு அடுப்படியை விட்டு பெண்களை வெளியே வரக்கூடாது என்று சொன்ன சமூகத்தின் மத்தியிலே தனியாளாக போராடி முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை பெற்ற ருக்மாபாய் கதையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
1864 ல் மும்பையில் ருக்மாபாய் பிறக்கிறார். ருக்மாபாய்க்கு இரண்டு வயது இருக்கும் போது அவருடைய தந்தை இறந்துப் போகிறார். அதன் பிறகு இவருடைய தாய் டாக்டர் அர்ஜூன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்கிறார். ருக்மாபாய் அவருடைய இரண்டாவது தந்தையை போல நன்றாக படித்து டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், பதினோறு வயதிலேயே ருக்மாபாயை தாதாஜி என்னும் நபருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்.
சில வருடங்களிலேயே தாதாஜி, 'உன்னுடைய புத்தகத்தையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு என்னுடன் வாழ வா!' என்று ருக்மாபாயை கட்டாயப்படுத்துகிறான். 'எனக்கு விவரம் தெரியாத வயதில் உன்னுடன் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதற்காக உன்னுடன் வந்து வாழ முடியாது' என்று ருக்மாபாய் சொல்ல, உடனே தாதாஜி இந்த விஷயத்தை உச்சநீதி மன்றத்திற்கு கொண்டு செல்கிறான். உச்சநீதி மன்றம் அவருக்கு இரண்டு ஆப்சென் தருகிறது. ஒன்று கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும். இலையென்றால் சிறையில் ஆறு மாதம் இருக்க வேண்டும் என்பது தான்.
அதற்கு ருக்மாபாய் சிறைக்கு செல்வதாக சொல்லி சிறை தண்டனையை அனுபவிக்கிறார். அந்த காலத்தில் அந்த பெண்ணின் எதிர்ப்பு பேசும் பொருளாக மாறுகிறது. Child marriage, women rights ஐ பற்றி குரல் கொடுக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் இவருடைய கேஸூம் பல வருடம் இழுத்துக் கொண்டே போனது. கடைசியாக தாதாஜியிடம் 2000 ரூபாயை கொடுத்து தான் ருக்மாபாய் அவருடைய சுதந்திரத்தை பெறுகிறார்.
இந்திய வரலாற்றிலேயே இவர் தான் இப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தியவர் என்று சொன்னால் அது மிகையாகாது. கதை இன்னும் முடியவில்லை. ருக்மாபாய் சின்ன வயதில் ஆசைப்பட்டது போலவே அவருடைய இரண்டாவது தந்தையின் உதவியோடு லண்டன் சென்று மருத்துவம் படித்து இந்தியாவிற்கு டாக்டர் ருக்மாபாயாக திரும்பி வந்தார். இவர் தான் இந்தியாவின் முதல் Practicing female doctor என்ற பெருமையை பெற்றவர்.
இந்த உலகமே நமக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தினாலும், அதற்கு நாம் ஆமோதிக்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. சில நேரங்களில் நமக்கு பிடிக்காததை எதிர்த்து போராடுவது கூட ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கும்.